Published : 09 Jul 2020 05:10 PM
Last Updated : 09 Jul 2020 05:10 PM
கோவிட்-19 தொடர்பான உயர்நிலை அமைச்சர்கள் குழுவின் 18வது கூட்டத்திற்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் நாடுமுழுவதும் இதுவரை எடுக்கப்பட்ட கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
நாட்டில் உள்ள கோவிட்-19 சுகாதார பராமரிப்பு உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
* 3,77,737 தனிமைப்படுக்கைகள், (ஐசியூ வசதி இல்லாமல்) 39,820 ஐசியூ படுக்கைகள், 20,047 வென்ட்டிலேட்டர்களுடன் 1,42,415 ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகள் 3,914 மருத்துவமனைகளில் உள்ளன
* சுகாதாரப் பராமரிப்பை பொறுத்தளவில் இதுவரை ஒட்டுமொத்தமாக 213.55 லட்சம் என்95 முகக்கவசங்கள்
* 120.94 லட்சம் பிபிஇ-க்கள் தயாரிப்பு
612.57 லட்சம் ஹெச்.சி.கியூ மாத்திரைகள் விநியோகம்
ஊரடங்கு தளர்வு 2.0 காலகட்டத்தில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் விதித்துள்ள வழிகாட்டி நெறிமுறைகளுக்கு ஏற்ப கட்டுப்பாட்டு மண்டலங்களை பிரிப்பது உள்ளிட்ட தனிமைப்படுத்துதல் மற்றும் கண்காணிப்பு ஆகிய நடவடிக்கை
கட்டுப்பாட்டு மண்டலங்களை வலைத்தளங்களில் அறிவித்தல், கட்டுப்பாட்டு மண்டலங்களின் சுற்றளவை தீவிரமாகக் கண்காணித்தல் மற்றும் அத்தியாவசியப் பணிகளுக்காக மட்டுமே நடமாட்டத்தை அனுமதித்தல்.
* தீவிரமாக தொடர்பு தடம் அறிதல், வீடு வீடாக ஆய்வு செய்தல், கண்காணித்தல், கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியில் தொற்று ஏற்பட வாய்ப்புள்ள புதிய தொற்றாளர்களைக் கட்டுப்படுத்தும் வகையில் பஃபர் மண்டலங்களை அடையாளம் காணுதல் ஆகியனவும் எதிர்கால நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்த முடிவு
* மிக மோசமான அளவில் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுக்கு பொதுசுகாதார நிபுணர்களைக் கொண்ட குழுவினர் தொடர்ச்சியாக வருகை புரிகின்றனர். இந்தக் குழுவினர் தொற்றை கட்டுப்படுத்துதல் மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மிகத் திறம்பட மேற்கொள்ள மாநிலங்களுக்கு உதவியாக இருக்கின்றனர்
* அமைச்சரவை செயலாளர் தலைமையில் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களோடு காணொலிக் காட்சி மூலம் நடைபெறும் கலந்துரையாடலில் தொற்றைத் தடுத்தல், பரிசோதனைகளை அதிகப்படுத்துதல், இறப்பைக் குறைத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment