Published : 07 Jul 2020 08:48 PM
Last Updated : 07 Jul 2020 08:48 PM
கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலைத் திறம்படக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பரிசோதனை, தொடர்பாளர் தடம் அறிதல் மற்றும் சிகிச்சை என்ற உத்தியைக் கடைபிடித்து வருகின்றனர்.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளதாவது
இந்தியாவில், கோவிட்-19 தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்ற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் தொற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல் மற்றும் தொற்றுள்ள பாசிட்டிவ் நபர்களுக்கு திறம்பட மருத்துவமனை சிகிச்சை அளித்தல் ஆகிய செயல்பாடுகளில் தங்களது கவனத்தைச் செலுத்தி வருகின்றனர்.
10 லட்சம் நபர்களுக்கு எத்தனை தொற்றுள்ள நபர்கள் உள்ளனர் என்ற விகிதத்தை விட 10 லட்சம் நபர்களுக்கு எத்தனை நபர்கள் குணமானார்கள் என்ற விகிதத்தை அதிக அளவில் பராமரிப்பதை உறுதிசெய்யும் அளவில் தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
மொத்த தொற்றுள்ள பாசிட்டிவ் நபர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் கூட குணமானவர்களின் எண்ணிக்கையானது வேகமாக அதிகரித்து வருவதால் தற்போது சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாகவே இருக்கிறது. இந்த நிலைமையானது கோவிட் மருத்துவமனைகளில் நெருக்கடி இல்லை என்பதையும் அவை விரிவுபடுத்தப்படவில்லை என்பதையும் உறுதிபடுத்துகிறது.
இந்தியாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சம் நபர்களுக்கு 315.8ஆக இருக்கிறது. அதே சமயம் நாட்டில் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 10 லட்சம் நபர்களுக்கு 186.3 என்ற குறைந்த அளவில் உள்ளது.
இவ்வாறு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT