Published : 07 Jul 2020 12:16 PM
Last Updated : 07 Jul 2020 12:16 PM
இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தைக் கடந்துள்ளது, உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 20 ஆயிரத்துக்கு மேல் அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 24 மணிநேரத்தில் கரோனா வைரஸால் 22 ஆயிரத்து 252 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 7 லட்சத்து 19 ஆயிரத்து 665 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 39 ஆயிரத்து 665 ஆக உயர்ந்து, மீண்டோர் சதவீதம் 61.13 ஆக உயர்ந்துள்ளது. 2 லட்சத்து 59 ஆயிரத்து 557 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொடர்ந்து 5-வது நாளாக 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 5 நாட்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனாவால் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் 467 பேர் கரோனாவில் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாகப் பலியானோர் எண்ணிக்கை 20 ஆயிரத்து 160 ஆக அதிகரித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் கடந்த 24 மணிநேரத்தில் 204 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்ததாக தமிழகத்தில் 61 பேர், டெல்லியில் 48 பேர், கர்நாடகாவில் 29 பேர், உத்தரப் பிரதேசத்தில் 24 பேர், மேற்கு வங்கத்தில் 22 பேர், குஜராத்தில் 17 பேர் பலியாகியுள்ளனர்.
தெலங்கானா, ஹரியாணாவில் தலா 11 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 9 பேரும், ஆந்திராவில் 7 பேரும், ஜம்மு காஷ்மீரில் 6 பேரும், ராஜஸ்தான், பஞ்சாப்பில் தலா 5 பேரும், கேரளா, ஒடிசாவில் தலா 2 பேரும், அருணாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்டில் தலா ஒருவரும் உயிரிழந்தனர்.
இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 9,026 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள டெல்லியில் உயிரிழப்பு 3,115 ஆகவும், குஜராத்தில் உயிரிழப்பு 1,960 ஆகவும், தமிழகத்தில் பலி எண்ணிக்கை 1,571 ஆகவும் அதிகரித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 779 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 617 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலி எண்ணிக்கை 809 ஆகவும், ராஜஸ்தானில் உயிரிழப்பு 461 ஆகவும் அதிகரித்துள்ளது.
தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 306 ஆகவும், ஹரியாணாவில் 276 ஆகவும், ஆந்திராவில் 239 ஆகவும் இருக்கிறது. கர்நாடகாவில் 401 பேரும், பஞ்சாப்பில் 169 பேரும் பலியாகியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 138 பேரும், பிஹாரில் 97 பேரும், ஒடிசாவில் 38 பேரும், கேரளாவில் 27 பேரும், உத்தரகாண்டில் 42 பேரும், இமாச்சலப் பிரதேசத்தில் 11 பேரும், ஜார்க்கண்டில் 20 பேரும், அசாமில் 14 பேரும், அருணாச்சலப் பிரதேசம், மேகாலயாவில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் 12 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 11 ஆயிரத்து 987 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,15,262 ஆக உயர்ந்துள்ளது.
2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 978 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 66,571 ஆகவும் அதிகரித்துள்ளது.
டெல்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,00,823 பேராக அதிகரித்துள்ளது. 72,008 பேர் குணமடைந்துள்ளனர்.
4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 36,772 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 26,315 பேர் குணமடைந்தனர்.
ராஜஸ்தானில் 20,688 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 15,284 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 28,636 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் 22,987 பேரும், ஆந்திராவில் 20,019 பேரும், பஞ்சாப்பில் 6,491பேரும், தெலங்கானாவில் 25,733 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 8,675 பேர், கர்நாடகாவில் 25,317 பேர், ஹரியாணாவில் 17,504 பேர், பிஹாரில் 11,876 பேர், கேரளாவில் 5,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,341 பேர் குணமடைந்துள்ளனர்.
ஒடிசாவில் 9,526 பேர், சண்டிகரில் 489 பேர், ஜார்க்கண்டில் 2,584 பேர், திரிபுராவில் 1,680 பேர், அசாமில் 12,160 பேர், உத்தரகாண்டில் 3,161 பேர், சத்தீஸ்கரில் 3,305 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 1,077 பேர், லடாக்கில் 1,005 பேர், நாகாலாந்தில் 625 பேர், மேகாலயாவில் 80 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தாதர் நகர் ஹாவேலியில் 297 பேர், புதுச்சேரியில் 802 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 331 பேர் குணமடைந்தனர். மிசோரத்தில் 197 பேர், சிக்கிமில் 125 பேர், மணிப்பூரில் 1,390 பேர், கோவாவில் 1,813 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அருணாச்சலப் பிரதேசத்தில் 270 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தமான் நிகோபர் தீவுகளில் 141 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT