Published : 06 Jul 2020 05:41 PM
Last Updated : 06 Jul 2020 05:41 PM

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத போக்குவரத்து: 2030-க்குள் அடைய ரயில்வே இலக்கு

பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் கரியமில வாயு இல்லா வெகுஜன போக்குவரத்து அமைப்பாக 2030-க்குள் ரயில்வேயை மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்காக பயன்படாத காலி இடங்களில் சூரிய சக்தி ஆலைகளை பெரிய அளவில் நிறுவ ரயில்வே அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.

இந்திய ரயில்வேயை கரியமில வாயு முற்றிலும் இல்லாத வெகுஜன போக்குவரத்தாக மாற்றும் நோக்கத்தை அடைய சூரிய சக்தியின் பயன்பாடு உதவும்.

நிறுவப்படும் சூரிய சக்தி திட்டங்கள் இந்திய ரயில்வேயின் தற்போதைய தேவையை நிறைவேற்றி, மின்சக்தி தற்சார்பு அடைந்த முதல் போக்குவரத்து நிறுவனமாக அதை மாற்றும். இது இந்திய ரயில்வேயை பசுமையாக்குவதோடு, சுய-சார்பானதாகவும் ஆக்கும்.

சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத மின்சாரத்தின் கொள்முதலில் இந்திய ரயில்வே முன்னோடியாக இருக்கிறது. எம்சிப் ரேபரேலியில் (உத்திர பிரதேசம்) நிறுவப்பட்ட 3 மெகாவாட் சூரிய ஒளி ஆலை உட்பட பல்வேறு சூரிய ஒளி திட்டங்களில் இருந்து மின்சாரக் கொள்முதலை அது தொடங்கியுள்ளது. இந்திய ரயில்வேயின் பல்வேறு நிலையங்கள் மற்றும் கட்டிடங்களில் சுமார் 100 மெகாவாட் அதிகபட்ச சக்தி கொண்ட கூரை மீது நிறுவப்படும் சூரிய மின்சக்தி அமைப்புகள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், மேல்நிலை இழுவை அமைப்புடன் நேரடியாக இணைக்கப்படக்கூடிய 1.7 மெகவாட் அதிகபட்ச சக்தி கொண்ட திட்டம் ஒன்று பினாவில் (மத்திய பிரதேசம்) நிறுவப்பட்டு, சோதனைகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகின்றன. 15 நாட்களுக்குள் இது தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாரத மிகு மின் நிறுவனத்துடன் இணைந்து இந்திய

ரயில்வேயால் உலகிலேயே முதல் முறையாக இந்தத் திட்டம் நிறுவப்பட்டுள்ளது. நேரடி மின்சாரத்தை ஒரு முனை மாற்று மின்சாரமாக மாற்றி ரயில்வேயின் மேல்நிலை இழுவை அமைப்புடன் நேரடியாக இணைக்கப்படக்கூடிய புதுமையான தொழில்நுட்பத்தை இது உள்ளடக்கியுள்ளது. பினா இழுவை துணை மின் நிலையத்தின் அருகில் இந்த சூரிய சக்தி ஆலை அமைக்கப்பட்டுள்ளது. வருடத்துக்கு சுமார் 25 லட்சம் அலகுகள் மின்சாரத்தை இது உற்பத்தி செய்து, ரயில்வேக்கு ஒவ்வொரு வருடமும் சுமார் ரூ 1.37 கோடியை இது மிச்சப்படுத்தும்.

இந்தப் புதுமையானத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த இந்திய ரயில்வே மற்றும் பாரத மிகு மின் நிறுவன அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். பெருநிறுவன சமூக பொறுப்புத் திட்டத்தின் கீழ் இந்தத் திட்டத்தை பாரத மிகு மின் நிறுவனம் எடுத்துக்கொண்டது.

கொவிட்-19 பொதுமுடக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருள்கள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறைகளுக்கு இடையிலும், இந்திய ரயில்வே மற்றும் பாரத மிகு மின் நிறுவனம் ஒன்றிணைந்து உழைத்து, ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட 9 அக்டோபர், 2019-இல் இருந்து வெறும் எட்டே மாதங்களில் இந்தப் பணியை நிறைவேற்றின.

இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் கரியமில வாயு இல்லா வெகுஜன போக்குவரத்து அமைப்பாக 2030-க்குள் ரயில்வேயை மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x