Published : 05 Jul 2020 04:32 PM
Last Updated : 05 Jul 2020 04:32 PM
இன்றைய சவாலானக் காலக்கட்டங்களில் புத்தரின் போதனைகளே தீர்வு, இக்காலத்துக்கு மட்டுமல்ல எக்காலத்துக்கும் புத்தரே தீர்வு என்று பிரதமர் மோடி பேசியதை வரவேற்றுள்ளார் காங்கிரஸ் தலைவர் ஹுசைன் தல்வாய்.
ஆனால் அதே வேளையில் நாட்டில் மோடி ஒற்றுமையைதான் உறுதி செய்ய வேண்டுமே தவிர பிரிவினையை அல்ல என்றார் அவர்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் அவர் கூறியதாவது: புத்தரின் கொள்கைகளை பிரதமர் நினைவூட்டியதை வரவேற்கிறேன், ஆனால் அவருக்கு ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
முதலில் இந்தியாவில் அதிகம் பவுத்தர்கள் இருந்தனர். இங்கு நல்ல பணிகளை அவர்கள் செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் ஆதிசங்கரர் காலத்தில் சித்ரவதை செய்யப்பட்டு வெளியே விரட்டப்பட்டனர். அதனால் தான் அவர்கள் சீனா, ஜப்பான் மற்றும் வேறு நாடுகளுக்குச் சென்றனர்.
எனவே கடந்த காலத்தில் நடந்தது தவறு என்பதை பிரதமர் இந்துக்களுக்குச் சுட்டிக்காட்ட வேண்டும், கண்டிக்க வேண்டும்.
மக்களை நம்முடன் அழைத்துச் செல்ல வேண்டுமே தவிர பிரிவினை செய்யக் கூடாது என்பதை பிரதமர் உறுதி செய்ய வேண்டும்.
லடாக் மக்கள் குரலுக்கு பிரதமர் செவிசாய்த்து சீனாவை எதிர்க்க நடவடிக்கைகளை அவர் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினார் ஹுசைன் தல்வாய்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT