Published : 04 Jul 2020 08:23 PM
Last Updated : 04 Jul 2020 08:23 PM
கேரளாவில் இன்று புதிதாக 240 பேருக்குக் கரோனா தொற்று பதிவாகியுள்ளதாகவும், 209 பேர் கரோனா தொற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
''மலப்புரம் மாவட்டத்தில் 37 பேர், கண்ணூர் மாவட்டத்தில் 35 பேர், பாலக்காடு மாவட்டத்தில் 29 பேர், பத்தனம்திட்டா மாவட்டத்தில் 22 பேர், ஆலப்புழா மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் தலா 20 பேர், திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் மாவட்டங்களில் தலா 16 பேர், காசர்கோடு மாவட்டத்தில் 14 பேர், எர்ணாகுளம் மாவட்டத்தில் 13 பேர், கோழிக்கோடு மாவட்டத்தில் 8 பேர், கோட்டயம் மாவட்டத்தில் 6 பேர், இடுக்கி மற்றும் வயநாடு மாவட்டங்களில் தலா 2 பேர் என இன்று 240 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்கள். இவர்களில் 152 பேர் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள். வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்கள் 52 பேர் ஆவர்.
பாலக்காடு மாவட்டத்தில் 44 பேர், கொல்லம் மாவட்டத்தில் 38 பேர், ஆலப்புழா மாவட்டத்தில் 36 பேர், பத்தனம்திட்டா மாவட்டத்தில் 20 பேர், கண்ணூர் மாவட்டத்தில் 16 பேர், திருவனந்தபுரம் மாவட்டத்தில் 15 பேர், திருச்சூர் மாவட்டத்தில் 10 பேர், கோட்டயம் மாவட்டத்தில் 9 பேர், எர்ணாகுளம் மாவட்டத்தில் 7 பேர், மலப்புரம் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் 6 பேர், இடுக்கி மாவட்டத்தில் 2 பேர் என இன்று மொத்தம் 209 பேர் கரோனா தொற்றலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள். இதையும் சேர்த்துக் கேரளத்தில் இதுவரை, 3,048 பேர் தொற்று குணமாகி வீடு திரும்பியிருக்கிறார்கள். இன்னும் 2,129 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் 1,77,759 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர், இன்று 10,295 பேர் கண்காணிப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். நோய்த்தொற்று அறிகுறிகளுடன் இன்று புதிதாக 367 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நோய்த்தொற்றுப் பரவல் அதிகம் உள்ள ஹாட் ஸ்பாட் பகுதிகளாக இன்று புதிதாக 13 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஏற்கெனவே ஹாட் ஸ்பாட் பட்டியலில் இருந்த இடங்களில் 7 இடங்கள் அதிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி கேரளாவில் 135 ஹாட் ஸ்பாட் பகுதிகள் உள்ளன''.
இவ்வாறு ஷைலஜா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT