Published : 03 Jul 2020 07:35 PM
Last Updated : 03 Jul 2020 07:35 PM
குஜராத், கொங்கன் மற்றும் கோவா, மத்திய மகாராஷ்டிரா மற்றும் கடலோர கர்நாடகாவில், பரவலாக அடுத்த 5 நாட்களுக்கு ஆங்காங்கே கனமான மழையோ அல்லது மிக கனத்த மழையோ பெய்யக்கூடும். என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது:
மேற்கு, மத்திய மற்றும் அதனையொட்டிய கிழக்கு இந்தியப் பகுதிகளில், அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும்.
அரபிக்கடலில் இருந்து மேற்கு கடலோரப் பகுதிகளில், மேற்கு, தென்மேற்கு திசையில் வீசும் காற்று மற்றும் குறைந்த வெப்ப மண்டலப் பகுதிகளான தெற்கு குஜராத் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் உருவாகியுள்ள சூறாவளி சுழற்சியால் உருவான ஈரப்பத ஒருங்கிணைவு காரணமாக, அடுத்த 5 நாட்களுக்கு, குஜராத், கொங்கன் மற்றும் கோவா, மத்திய மகாராஷ்டிரா மற்றும் கடலோர கர்நாடகாவில், பரவலாக, ஆங்காங்கே கனமான மழையோ அல்லது மிக கனத்த மழையோ பெய்யக்கூடும்.
கொங்கன் மற்றும் கோவா (மும்பை உட்பட), மத்திய மகாராஷ்டிராவின் ஓரிரு இடங்களில், 3 மற்றும் 4 ஜுலை ஆகிய தேதிகளிலும், குஜராத் மண்டலத்தில் 4 மற்றும் 5 ஜுலை, 2020 ஆகிய தேதிகளிலும் மிகக் கனத்த மழை (ஏறக்குறைய 20செ.மீ) பெய்யக்கூடும்.
கிழக்கு உத்தரப்பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் மையம் கொண்டுள்ள சூறாவளி சுழற்சி மற்றும் கிழக்கு உத்தரப்பிரதேசத்திலிருந்து கிழக்கு விதர்பா வரையிலான குறைந்த வெப்ப மண்டலப் பகுதிகளில் வடக்கு – தெற்கு திசையில் காற்று வீசக்கூடும். இதன் காரணமாக, மத்திய மற்றும் அதனையொட்டிய கிழக்கு இந்தியப் பகுதிகளில், அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய, கனமானது முதல் மிகக் கனத்த மழை வரை பெய்யக்கூடும்.
இவ்வாறு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT