Published : 03 Jul 2020 09:09 AM
Last Updated : 03 Jul 2020 09:09 AM
தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கரோனா பாதித்த பிறகு, ஆந்திராவுக்கு ரூ.8 ஆயிரம் கோடி நிதி வழங்கியுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த நிதியைக்கூட மாநில அரசு சரிவரபயன்படுத்தவில்லை. ஏழைக் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 ஆயிரம் நிதி வழங்குமாறு ஆலோசனை கூறினேன். அதையும் பொருட்படுத்தவில்லை. கரோனா பரிசோதனைக்கான மருத்துவ உபகரணங்கள் போன்றவை வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளது.
தற்போது புதிதாக வாங்கப்பட்டுள்ள 108 மற்றும் 104 ஆம்புலன்ஸ் வாகனங்களின் நிர்வாகத்தை ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்பியான விஜய்சாய் ரெட்டியின் சம்பந்திக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்கியதில் பெரும் ஊழல் நடந்துள்ளது. அமராவதியில் தலைநகருக்காக நிலம் வழங்கிய விவசாய குடும்பத்தினர் கடந்த 200 நாட்களாக தொடர் போராட்டம் நடந்தி வருகின்றனர். ஆனால் இதனை அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT