Last Updated : 02 Jul, 2020 08:24 AM

 

Published : 02 Jul 2020 08:24 AM
Last Updated : 02 Jul 2020 08:24 AM

ஆடு மேய்ப்பவருக்கு கரோனா பாதிப்பு: கர்நாடகாவில் 47 ஆடுகள் தனிமைப்படுத்தப்பட்டு சோதனை

கோப்புப் படம்

பெங்களூரு

கர்நாடகாவில் ஆடு மேய்ப்பவருக்கு கரோனா வைரஸ்தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவர் வளர்த்த 47 ஆடுகளுக்குகரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் தும்கூருமாவட்டம் சிக்கநாயக்கனஹள்ளியை சேர்ந்த விவசாயிக்கு கடந்த 3 நாட்களுக்கு முன் சளி காய்ச்சல் மற்றும் சுவாசக்கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அவரை பரிசோதித்த போது கரோனா வைரஸ் பாதிப்புஉறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் வளர்த்த 47 ஆடுகளில் சிலவற்றுக்கு நேற்று திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டது. இதுகுறித்து சுகாதாரத்துறை மற்றும் கால்நடைத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து தும்கூரு மாவட்டகால்நடைத்துறை துணை இயக்குநர் கே.ஜி.நந்தீஷ் தலைமையிலான குழுவினர் நேற்று சிக்கநாயக்கனஹள்ளிக்கு விரைந்து சென்று 47 ஆடுகளையும் தனிமைப்படுத்தினர். முகக் கவசம், கரோனாபரவாமல் தடுக்கும் உடை உள்ளிட்டவை அணிந்து ஆடுகளுக்கு கரோனா தாக்கியுள்ளதா என்பதை கண்டறிய அவற்றின் சளி, ரத்தம் உள்ளிட்ட மாதிரிகளை எடுத்தனர். இதனை பெங்களூருவில் உள்ளகால்நடை பராமரிப்பு மையத்துக்கும், போபாலில் உள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் உயிரியல் தொழில்நுட்ப மையத்துக்கும் அனுப்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x