Published : 01 Jul 2020 04:01 PM
Last Updated : 01 Jul 2020 04:01 PM
ஒவ்வொருவரி்ன் கடின உழைப்பால் டெல்லியில் கரோனா வைரஸ் பரவல் சூழல் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது என்று முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று தெரிவித்தார்
நாட்டிலேயே கரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தார்போல் டெல்லி இருந்து வந்தது. ஆனால், கடந்த சில வாரங்களாக பரிசோதனையை தீவிரப்படுத்தியதன் விளைவாக கரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. 2-வது இடத்தில் இருந்த டெல்லி மூன்றாவது இடத்துக்கு சென்றுள்ளது.
டெல்லியில் கரோனாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 87 ஆயிரத்து 360 ஆகவும், உயிரழந்தவர்கள் எண்ணிக்கை 2,742 ஆகவும் இருக்கிறது. ஜூன் மாத இறுதிக்குள் ஒரு லட்சமாக பாதிப்பு இருக்கும் என்று மருத்துவர்கள் குழு எச்சரித்தை நிலையில் தீவிரமான பரிசோதனையால் கட்டுப்படுத்தியுள்ளது டெல்லி அரசு.
இதுகுறித்து டெல்லி முதல்வர் அரவிந்த கேஜ்ரிவால் ஊடகங்களுக்கு காணொலி மூலம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஜூன் 30-ம் தேதிக்குள் டெல்லியில் ஒரு லட்சம் பேர் கரோனாவில் பாதிக்கப்படுவார்கள் என பலரும் கணித்தார்கள். 60 ஆயிரம் பேர் சிகிச்சையில் இருப்பார்கள் என்று தெரிவித்தனர்.
ஆனால், இன்று 87 ஆயிரமாக பாதிப்பைக் குறைத்துள்ளோம்,26 ஆயிரம் பேர் மட்டுமே சிகிச்சையில் இருக்கிறார்கள். இதுதான் ஒவ்வொருவரின் கடின உழைப்பின் பலன். அனைவரின் கடின உழைப்பால் டெல்லியில் கரோனா வைரஸ் கட்டுக்குள் வந்துவிட்டது
அடுத்த சில நாட்களில் டெல்லியின் சூழல் மேம்படும். நாங்கள் கரோனைவைக் கட்டுப்படுத்திவிட்டோம், ஒழிந்துவிட்டது என்று மனநிறைவு கொள்ளமாட்டோம், வைரஸை யாராலும் கணிக்க முடியாது. ஆதலால் தொடர்ந்து விழிப்புடன் இருப்போம்
இக்கட்டான நேரத்தில் நாங்கள் கரோனாவை பரவலைப் பார்த்து தலையில் கைவைத்து, தரையில் அமர்ந்து நம்பிக்கை இழந்துவிடவில்லை. யாரிடமெல்லாம் உதவி கோர முடியுமோ அங்கு உதவி கேட்டோம், இக்கட்டான சூழலில் இருந்து மீண்டுள்ளோம்.
ஜூன் 30-ம் தேதி ஒருலட்சம் பேர்வரை கரோனாவில் பாதிக்கப்படலாம் என்று மக்களு்கு ஏற்கெனவே எச்சரிக்கை செய்து, அவர்களை நாங்கள் தயார்படுத்திவிட்டோம்.
கரோனா பரிசோதனையின் அளவை வரும் நாட்களில் அதிகரிப்போம். இதற்கு முன் 100 பேரின் மாதிரிகளை எடுத்து பரிசோதித்தால் அதில் 31 பேருக்கு கரோனா இருந்தது. இப்போது 100 பேருக்கு கரோனா பரிசோதனை செய்தால், அதில்13 பேருக்கு மட்டுமே கரோனா இருப்பதால், நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது
இவ்வாறு அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT