Published : 30 Jun 2020 11:56 AM
Last Updated : 30 Jun 2020 11:56 AM
இந்தியாவில் கரோனா வைரஸால் கடந்த 24 மணி நேரத்தில் 18 ஆயிரத்து 522 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 418 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 66 ஆயிரத்து 849 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 34 ஆயிரத்து 821 ஆக உயர்ந்துள்ளது. 2 லட்சத்து 15 ஆயிரத்து 125 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் 418 பேர் உயிரிழந்ததையடுத்து, பலியானோர் எண்ணிக்கை 16 ஆயிரத்து 893 ஆக அதிகரித்து, 17 ஆயிரத்தை நெருங்குகிறது. மகாராஷ்டிராவில் நேற்று அதிகபட்சமாக 181 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் 62 பேர், டெல்லியில் 57 பேர், குஜராத், கர்நாடகாவில் தலா 19 பேர் பலியானார்கள்.
மேற்கு வங்கத்தில் 14 பேர், உத்தரப் பிரதேசத்தில் 12 பேர், ஆந்திராவில் 11 பேர், ஹரியாணாவில் 9 பேர், மத்தியப் பிரதேசத்தில் 7 பேர், ராஜஸ்தான், தெலங்கானாவில் தலா 6 பேர் உயிரிழந்தனர். பஞ்சாப்பில் 5 பேர், ஜார்க்கண்டில் 3 பேர், பிஹார், ஒடிசாவில் தலா 2 பேர், அசாம், ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்டில் தலா ஒருவர் உயிரிழந்தனர்.
இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 7,610 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள டெல்லியில் உயிரிழப்பு 2,680 ஆகவும், குஜராத்தில் உயிரிழப்பு 1,827 ஆகவும், தமிழகத்தில் பலி எண்ணிக்கை 1,141 ஆகவும் அதிகரித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 651 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 564 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலி எண்ணிக்கை 672 ஆகவும், ராஜஸ்தானில் உயிரிழப்பு 405 ஆகவும் அதிகரித்துள்ளது.
தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 253 ஆகவும், ஹரியாணாவில் 218 ஆகவும், ஆந்திராவில் 180 ஆகவும் இருக்கிறது. கர்நாடகாவில் 226 பேரும், பஞ்சாப்பில் 138 பேரும் பலியாகியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 95 பேரும், பிஹாரில் 62 பேரும், ஒடிசாவில் 23 பேரும், கேரளாவில் 22 பேரும், உத்தரகாண்டில் 39 பேரும், இமாச்சலப் பிரதேசத்தில் 9 பேரும், ஜார்க்கண்டில் 15 பேரும், அசாமில் 11 பேரும், மேகாலயாவில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் 10 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 823 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 88,960 ஆக உயர்ந்துள்ளது.
2-வது இடத்தில் உள்ள டெல்லியைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது தமிழகம். தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 86 ஆயிரத்து 224 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 47,744 ஆகவும் அதிகரித்துள்ளது. டெல்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 85,161 பேராக அதிகரித்துள்ளது. 56,235 பேர் குணமடைந்துள்ளனர்.
4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 31,938 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 23,240 பேர் குணமடைந்தனர்.
ராஜஸ்தானில் 17,660 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 13,186 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 22,147 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் 17,907 பேரும், ஆந்திராவில் 13,891 பேரும், பஞ்சாப்பில் 5,418 பேரும், தெலங்கானாவில் 15,394 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 7,237 பேர், கர்நாடகாவில் 14,295 பேர், ஹரியாணாவில் 14,210 பேர், பிஹாரில் 9,640 பேர், கேரளாவில் 4,189 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,152 பேர் குணமடைந்துள்ளனர்.
ஒடிசாவில் 6,859 பேர், சண்டிகரில் 435 பேர், ஜார்க்கண்டில் 2,364 பேர், திரிபுராவில் 1,346 பேர், அசாமில் 7,752 பேர், உத்தரகாண்டில் 2,831 பேர், சத்தீஸ்கரில் 2,761 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 942 பேர், லடாக்கில் 964 பேர், நாகாலாந்தில் 434 பேர், மேகாலயாவில் 47 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தாதர் நகர் ஹாவேலியில் 203 பேர், புதுச்சேரியில் 619 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 221 பேர் குணமடைந்தனர். மிசோரத்தில் 148 பேர், சிக்கிமில் 88 பேர், மணிப்பூரில் 1,227 பேர், கோவாவில் 1,198 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அருணாச்சலப் பிரதேசத்தில் 187 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தமான் நிகோபர் தீவுகளில் 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT