Published : 29 Jun 2020 02:44 PM
Last Updated : 29 Jun 2020 02:44 PM
இப்போது நடக்கும் ஆட்சி ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கும் அப்போதைய மன்மோகன் சிங் அரசு அல்ல என்பதை காங்கிரஸார் புரிந்து கொள்ளவில்லை என்று மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி காட்டமாக விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் அபிஷேக் மனு சிங்வி பிஎம் கேர்ஸ் நிதிக்கு நூறு கோடிக்கணக்கான ரூபாய்கள் பெறுமான நன்கொடை அளித்த சீன நிறுவனங்கள், சீன முதலீடு கொண்ட இந்திய நிறுவனங்களின் பட்டியலை நேற்று வெளியிட்டு சலசலப்பு ஏறப்டுத்த பாஜக கலகலத்துப் போனது. ஆனால் முக்தர் அப்பாஸ் நக்வி காங்கிரஸாரின் இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
“ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஆட்டுவிக்க இது ஒன்றும் அப்போதைய மன்மோகன் சிங் அரசு அல்ல என்பதை காங்கிரஸ் கட்சியினர் புரிந்து கொள்ள மறுக்கின்றனர்.
நரேந்திர மோடி அரசு வளர்ச்சி மற்றும் தேசப்பாதுகாப்புக்காக அர்ப்பணித்துக் கொண்ட அரசு. காங்கிரஸார் எங்களுக்கு அறிவுரை கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
காங்கிரஸ் கட்சி குடும்ப புகைப்பட சட்டகத்துக்குள் அகப்பட்டுக் கொண்டுள்ளது. தரையில் இருக்கும் எதார்த்தங்கள் அவர்களுக்குப் புரியாது.
இந்தியாவுக்கு அச்சுறுத்தல் விளைவுக்கும் சக்திகளுக்கு காங்கிரஸாரின் கேள்விகள் ஆக்சிஜன் ஆகும். நாட்டின் மீதுள்ள மதிப்பைக் கெடுக்கின்றனர். மக்களை தவறாக வழிநடத்தி குழப்புகின்றனர்.
இந்தியாவுக்கு எதிரான சக்திகள் தங்களது தீய திட்டங்களுக்கு காங்கிரஸைப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது” என்றார் முக்தர் அப்பாஸ் நக்வி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT