Published : 29 Jun 2020 08:00 AM
Last Updated : 29 Jun 2020 08:00 AM
மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நேற்று கூறியதாவது:
கரோனா பாதிப்பு காரணமாகஒரு புறம் பலர் மனஅழுத்தங்களோடு வாழ்ந்து வருகிறார்கள். மற்றொரு புறம், இந்த ஊரடங்கு காலத்தில், சந்தோஷங்களின் சின்னச்சின்ன விஷயங்களைக்கூட தாங்கள் மீண்டும் கண்டுபிடித்துக் கொண்டிருப்பதாக சிலர்என்னோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக பாரம்பரியமான உள்ளரங்கு விளையாட்டுகளை, குடும்பத்தாரோடு சேர்ந்து விளையாடி ஆனந்தமாக இருந்த அனுபவத்தை என்னோடு பகிர்ந்து கொண்டனர்.
முழு ஊரடங்கில் ஓய்வாக இருக்கும் மக்கள் பலரும் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி வருகின்றனர். நீங்கள் பச்சிஸி என்ற ஒரு விளையாட்டைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். பல்லாங்குழி (தமிழ்நாடு), அலிகுலிமனே (கர்நாடகா), வாமன குண்டலு (ஆந்திரா) என பல பெயர்களில் விளையாடி வருகின்றனர். இந்த விளையாட்டு தென்னிந்தியாவில் மட்டுமல்ல, தெற்காசியா ஏன், உலகம் முழுவதுமே தற்போது பிரபலமாகி வருகிறது.
மேலும், பரமபதம் அல்லது மோக் ஷ பதம் அல்லது சோபன பதம் எனப்படும் விளையாட்டு, கல்லாங்கல் எனப்படும் சிறு கற்களை தூக்கிப்போட்டு பிடித்து விளையாடும் விளையாட்டுகளை சிறுவர்களும் விளையாடுகின்றனர்.
இந்தக் கல்லாங்கல் ஆட்டத்தை குட்டா என்று பரவலாக அழைக்கின்றனர். சிறியவர் பெரியவர் எனஅனைவருக்குமான ஆட்டம் இது.இதற்குத் தேவை ஒரே அளவிலான 5 சிறிய கற்கள், இனி நீங்கள்குட்டா ஆடத் தயார். ஒரு கல்லைமேலே தூக்கிப் போட்டு அது அந்தரத்தில் இருக்கும் வேளையில்நீங்கள் தரையில் வைக்கப்பட்டிருக்கும் ஏனைய கற்களைத் திரட்டிக் கொள்ள வேண்டும்.
இதுபோன்ற பாரம்பரிய விளையாட்டுகள்தான் நம் தேசத்தின் மக்களை இன்றைக்கும் உயிர்போடு வைத்திருக்கிறது.
இதேபோல கிராமங்களில் தரையில் கோடு கிழித்து, தாயம்விளையாட்டும் விளையாடுகின்றனர். நமது இளைய தலைமுறையினருக்காக, நமது ஸ்டார்ட் அப்புகளுக்காக, இங்கே, ஒரு புதிய,வலுவான சந்தர்ப்பம் காத்திருக்கிறது. நாம் பாரத நாட்டின் பாரம்பரியமான உள்ளரங்க விளையாட்டுகளின் ஒரு புதிய-கவர்ச்சிகரமான வடிவத்தை முன்வைக்க வேண்டும். இவற்றோடு தொடர்புடைய பொருட்களைத் திரட்டுவோர், அளிப்போருடன், ஸ்டார்ட் அப்புகளும் மிகவும் பிரபலமடைந்து விடும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT