Published : 29 Jun 2020 07:56 AM
Last Updated : 29 Jun 2020 07:56 AM
கடந்த 15-ம் தேதி கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய - சீன ராணுவ வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும் 2 பேர் மட்டுமே உயிரிழந்திருப்பதாக சீன அரசு கூறி வருகிறது.
சீனா - இந்தியா இடையே ஏற்கெனவே கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி இரு நாட்டு வீரர்களும் எல்லையில் ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது. இந்த சூழ்நிலையில் கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு முன்பாக தற்காப்பு கலைகளில் தேர்ச்சி பெற்ற வீரர்களை எல்லைப் பகுதிக்கு சீனா அனுப்பி வைத்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சீன அரசு தொலைக்காட்சியான சிசிடிவி வெளியிட்ட செய்தியில், ‘‘என்போ பைட் கிளப்பை சேர்ந்த 20 வீரர்கள் திபெத் படையில் சேர்க்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தது.
சர்வதேச தற்காப்பு கலை போட்டிகளில், 'என்போ பைட் கிளப்' பங்கேற்று வருகிறது. ‘‘கல்வான் பள்ளத்தாக்கு பகுதி மோதலில் இந்திய வீரர்களுடன் இந்த கிளப் வீரர்கள் சண்டையிட்டார்களா?’’ என்று அதன் தலைவர் என்போவிடம் சர்வதேச ஊடகங்கள் கேள்வி எழுப்பின. இதற்கு அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார். சீன ராணுவ லெப்டினென்ட் ஜெனரல் வாங் ஹாய்ஜியாங் கூறும்போது, ‘‘என்போ பைட் கிளப்பை சேர்ந்த வீரர்கள் எல்லைப் பகுதியில் முகாமிட்டுள்ள ராணுவத்தில் இணைந்துள்ளனர். அவர்களின் வருகையால் படையின் பலம் அதிகரித்துள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT