Published : 29 Sep 2015 09:39 AM
Last Updated : 29 Sep 2015 09:39 AM
மேற்கு வங்க மாநில லாட்டரி மோசடியின் மதிப்பு ரூ. 4,000 கோடியாக இருக்கும் என கருதப்படுகிறது.
வருமான வரித் துறை கடந்த 24 ம் தேதி மத்திய நேரடி வரி விதிப்பு வாரியத்துடன் இணைந்து மேற்கு வங்கத்தின் பல இடங்களில் சோதனை நடத்தியது. இதில் ரூ.80 கோடி ரொக்கம் சிக்கியது. இது தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, இந்த லாட்டரி மற்றும் ஹவாலா மோசடி வழக்கு, மத்திய அமலாக்கத் துறை யுடன் இணைந்து விசாரிக்கப்படும் நிலையில், மோசடியின் மொத்த மதிப்பு ரூ.4,000 கோடியாக இருக்கும் என கருதப்படுகிறது. இதனால் மேற்கு வங்கத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து ‘தி இந்து’விடம் அமலாக்கத் துறையினர் கூறும் போது, “கொல்கத்தாவில் கைது செய்யப்பட்ட நாகராஜனிடம் நடத்திய விசாரணையில் கடந்த 3 ஆண்டுகளில் மேற்கு வங்க லாட்டரி மோசடியில் சம்பாதித்த பெரும்பாலான பணம், ஹவாலா முறையில் ஷார்ஜா மற்றும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கு 3 அரசியல் புள்ளிகள் உதவி யாக இருந்துள்ளனர். இதன் மீதிப் பணம் தமிழகம், மேற்கு வங்கம், பிஹார் மற்றும் வடகிழக்கு மாநிலங் களின் அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
நாகராஜனின் சகாவான தமிழகத்தை சேர்ந்த பிரபல லாட்டரி அதிபர் மீது கேரளத்தில் பதிவான வழக்குகள் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே, இந்த வழக்கையும் சிபிஐக்கு பரிந்துரைப்பது சரியாக இருக்கும் என கருதுகிறோம்” என்றனர்.
தமிழகத்தில் நடந்தது போலவே, மேற்கு வங்கத்தில் லாட்டரி மோசடி நடத்தப்பட்டிருப்பது தெரியவந்துள் ளது. இவ்விரு மாநிலங்களிலும் அவற்றின் அரசுகள் லாட்டரி விற் பனைக்கு தடை விதித்த பின்னரே மோசடி தொடங்கியுள்ளது. இது தமிழகத்தில் 2003-ம் ஆண்டிலும், மேற்கு வங்கத்தில் கடந்த சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பும் தொடங்கியுள்ளது.
இதில், பல லட்சம் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டாலும் அவற்றின் குலுக்கல் நடத்தாமல் அனைத்து தொகையையும் நிறுவனத்தினரே எடுத்துக்கொண்டுள்ளதாக கூறப் படுகிறது. மற்றொரு மோசடியாக விற்பனை செய்யப்பட்டாத சில லாட்டரி சீட்டுகளுக்கு பரிசு கிடைக் கும் வகையில் குலுக்கலில் மோசடி செய்து, அந்தப் பணத்தை நிறுவனமே வைத்துக்கொண்டதாக தெரியவந்துள்ளது.
இந்த மோசடிப் பணம் அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்பட்டிருப் பதற்கு சான்றாக, மேற்கு வங்க அரசியல் புள்ளி ஒருவரின் குடும்ப திருமண நிகழ்ச்சியில் தமிழக லாட்டரி அதிபர் கலந்துகொண்ட தாக அமலாக்கத்துறை சுட்டிக் காட்டுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT