Published : 27 Jun 2020 10:54 AM
Last Updated : 27 Jun 2020 10:54 AM
இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் இதுவரையில்லாத வகையில் 18 ஆயிரத்து 552 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 384 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 6 நாட்களில் ஒரு லட்சம் பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 1-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை இந்தியாவில் கரோனாவால் 2 லட்சத்து 99 ஆயிரத்து 866 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் உள்ள கரோனா நோயாளிகளில் 55 சதவீதம் பேர் 10 நகரங்களில் உள்ளனர். குறிப்பாக டெல்லி, மும்பை, சென்னை, தானே, பால்கர், புனே, ஹைதராபாத், ரெங்காரெட்டி, அகமதாபாாத், பரிதாபாத் ஆகிய நகரங்களில்தான் நாள்தோறும் அதிகமான அளவு கரோனா நோயாளிகள் வருகின்றனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒட்டுமொத்தமாக 5 லட்சத்து 8 ஆயிரத்து 953 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 95 ஆயிரத்து 880 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 387 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்தோர் சதவீதம் 58.13% ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 384 பேர் உயிரிழந்துள்ளதையடுத்து, பலியானோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 685 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 175 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் 63 பேர், தமிழகத்தில் 46 பேர், உத்தரப் பிரதேசத்தில் 19 பேர், குஜராத்தில் 18 பேர், ஹரியாணாவில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திராவில் 12 பேர், மேற்கு வங்கம், கர்நாடகத்தில் தலா 10 பேர், தெலங்கானாவில் 7 பேர், மத்தியப் பிரதேசத்தில் 4 பேர், பஞ்சாப்பில் இருவர், ஜம்மு காஷ்மீர், சத்தீஸ்கர், பிஹார், ராஜஸ்தான், உத்தரகாண்டில் தலா ஒருவர் உயிரிழந்தனர்.
இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 7,106 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள டெல்லியில் உயிரிழப்பு 2,492 ஆகவும், குஜராத்தில் உயிரிழப்பு 1,771 ஆகவும், தமிழகத்தில் பலி எண்ணிக்கை 957 ஆகவும் அதிகரித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 616 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 546 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலி எண்ணிக்கை 630 ஆகவும், ராஜஸ்தானில் உயிரிழப்பு 380 ஆகவும் அதிகரித்துள்ளது.
தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 237 ஆகவும், ஹரியாணாவில் 211 ஆகவும், ஆந்திராவில் 148 ஆகவும் இருக்கிறது. கர்நாடகாவில் 180 பேரும், பஞ்சாப்பில் 122 பேரும் பலியாகியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 91 பேரும், பிஹாரில் 58 பேரும், ஒடிசாவில் 17 பேரும், கேரளாவில் 22 பேரும், உத்தரகாண்டில் 37 பேரும் , இமாச்சலப் பிரதேசத்தில் 9 பேரும், ஜார்க்கண்டில் 12 பேரும், அசாமில் 9 பேரும், மேகாலயாவில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் 9 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 765 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 79,815 ஆக உயர்ந்துள்ளது.
அதைத் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ள டெல்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 77,240 பேராக அதிகரித்துள்ளது. 47,091 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்து 622 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 41,357 ஆகவும் அதிகரித்துள்ளது.
4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 30,095 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 22,030 பேர் குணமடைந்தனர்.
ராஜஸ்தானில் 16,660 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 12,798 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 20,943 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் 16,190 பேரும், ஆந்திராவில் 10,331 பேரும், பஞ்சாப்பில் 4,627 பேரும், தெலங்கானாவில் 10,444 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 6,422 பேர், கர்நாடகாவில் 11,489 பேர், ஹரியாணாவில் 12,884 பேர், பிஹாரில் 8,716 பேர், கேரளாவில் 3,876 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,008 பேர் குணமடைந்துள்ளனர்.
ஒடிசாவில் 6,180 பேர், சண்டிகரில் 425 பேர், ஜார்க்கண்டில் 2,290 பேர், திரிபுராவில் 1,259 பேர், அசாமில் 6,607 பேர், உத்தரகாண்டில் 2,623 பேர், சத்தீஸ்கரில் 2,545 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 864 பேர், லடாக்கில் 946 பேர், நாகாலாந்தில் 371 பேர், மேகாலயாவில் 47 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தாதர் நகர் ஹாவேலியில் 163 பேர், புதுச்சேரியில் 502 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 187 பேர் குணமடைந்தனர். மிசோரத்தில் 145 பேர், சிக்கிமில் 86 பேர், மணிப்பூரில் 1,075 பேர், கோவாவில் 1,039 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அருணாச்சலப் பிரதேசத்தில் 172 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தமான் நிகோபர் தீவுகளில் 72 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT