Published : 26 Jun 2020 08:02 PM
Last Updated : 26 Jun 2020 08:02 PM

ஏவுகணையை நீருக்குள்ளேயே திசைதிருப்பி செயலிழக்க வைக்கும் அமைப்பு: உள்நாட்டிலேயே தயாரிப்பு

புதுடெல்லி

ஏவுகணையை நீருக்குள்ளேயே திசைதிருப்பி செயலிழக்க வைக்கும் வகையில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அமைப்பை கப்பல்படை நிறுவியுள்ளது.

அனைத்து முன்வரிசை போர்க் கப்பல்களில் இருந்தும் ஏவக்கூடிய வகையிலான மேம்பட்ட ஏவுகணையை திசை திருப்பி செயலிழக்க வைக்கும் அமைப்பை நிறுவுவதற்கான ஒப்பந்தம் இன்று ஏற்பட்டு இருக்கிறது. இதனோடு இணைத்துப் பார்க்கும் போது இந்தியக் கப்பல் படையில் நீர்மூழ்கிக் கப்பலுக்கு எதிராகப் போர் புரியும் திறனுக்கு இது ஒரு மிகப்பெரிய உந்து சக்தியாக இருக்கும்.

ஏவுகணையை திசை திருப்பி செயலிழக்க வைக்கும் அமைப்புக்கான வடிவமைப்பும், மேம்பாடும் உள்நாட்டில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் ஆய்வுக் கூடங்களிலேயே மேற்கொள்ளப்பட்டு இருந்தது. பாதுகாப்பு அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனமான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டானது திசைதிருப்பி செயலிழக்க வைக்கும் இந்த அமைப்பை உற்பத்தி செய்யும் பணியை மேற்கொள்ளும். இந்த அமைப்பின் மூலவடிவ மாதிரி கப்பலில் அதற்கென ஒதுக்கப்பட்ட பகுதியில் நிறுவப்பட்டு அனைத்துவிதமான பயனாளர் மதிப்பீட்டு முன்னோட்டப் பரிசோதனைகளையும் பூர்த்தி செய்துள்ளது. கப்பல்படை ஊழியர் தகுதித் தேவைகளுக்கு ஏற்ப இதன் சிறப்பியல்புகள் அனைத்தும் பரிசோதித்துப் பார்க்கப்பட்டுள்ளன.

பாதுகாப்புத் தொழில்நுட்பத்தில் உள்நாட்டு மேம்பாடு என்பதை நோக்கிய செயல்பாட்டில் கப்பல்படை மற்றும் டிஆர்டிஓ இணைந்து செயலாற்றுவதற்கான சாட்சியமாக இந்தப் போர்க்கருவியை இணைத்துக் கொள்வது என்பது இருப்பதோடு அரசின் இந்தியாவில் தயாரியுங்கள் என்ற முன்னெடுப்புக்கான முதன்மை ஆதரவாகவும் இது இருக்கிறது. மேலும் நாட்டின் குறிப்பிட்ட சிறிய சந்தைகளுக்கான சுயசார்பு தேவையைப் பூர்த்தி செய்வதாகவும் இது உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x