Published : 26 Jun 2020 09:56 AM
Last Updated : 26 Jun 2020 09:56 AM
பெங்களூருவில் உள்ள கே.சி. ஜெனரல் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை காலை 60 வயதான பெண் கரோனா நோயாளி கழிவறையில் தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த 60 வயது பெண்மணி, இவரது மருமகள், பேத்தி ஆகியோர் தனிமை முகாமிலிருந்து ஜூன் 18ம் தேதிக்கு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர், காரணம் இவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதே.
இதனை தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு உறுதி செய்த மருத்துவமனையின் அதிகாரி பி.ஆர்.வெங்கடேஷய்யா கூறும்போது, அந்தப் பெண்மணி தேறி வந்தார், அவரது ஸ்வாப் சோதனை முடிவுகள் நெகெட்டிவ் என்று வருவதற்காக காத்திருந்தோம், என்றார்.
“இன்று அதிகாலை 2.40 மணியளவில் இந்த பெண்மணி வாஷ்ரூமில் தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டார். இவர் படுக்கையில் இல்லாததை அறிந்த மருமகள் மருத்துவர்களை உடனே அழைத்தார்” என்றார் வெங்கடேஷய்யா.
இந்தப் பெண் தனக்கு கரோனா பாசிட்டிவ் என்பதால் மன தைரியம் இழந்து மிகுந்த கவலையுடனும் பீதியுடனும் இருந்ததாக கூறப்படுகிறது.
பெங்களூருவில் கரோனா நோயாளி மருத்துவமனையில் தற்கொலை செய்து கொள்வது இது இரண்டாவது சம்பவமாகும்.
இதனால் மருத்துவமனையில் அதிர்ச்சியும் சோகமும் நிலவுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT