Published : 25 Jun 2020 07:05 PM
Last Updated : 25 Jun 2020 07:05 PM
அவசர நிலை மனநிலையிலிருந்து காங்கிரஸ் கட்சி இன்னும் ஏன் அகலவில்லை. ஒரு குடும்பத்தின் நலன்தான் கட்சியின் நலனாகவும், தேசத்தின் நலனாகவும் இருந்தது என்று உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா காங்கிரஸைக் காட்டமாக விமர்சிக்க அதற்கு காங்கிரஸ் கட்சியும் பதிலடி கொடுத்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, “இந்தியாவின் ஆளும் கட்சியாக பாஜக பதிலளிக்க வேண்டியத் தேவையுள்ளது. ஏன் இந்த பெரும்பான்மை ஆட்சி இருவரால் மட்டுமே ஆளப்படுகிறது? மற்றவர்களெல்லாம் சும்மாவா?” என்று தன் ட்விட்டர் பக்கத்தில் கேட்டுள்ளார்.
மேலும் அவர், “ஏன் குதிரைப்பேரம், பெரியக் கட்சித்தாவல் வலைவிரிப்பு, நிறுவனங்களை அதிகார வலையின் கீழ் கொண்டு வருதல் ஆகியவைதான் உங்கள் பாரம்பரியமா? நேரு-காந்தி மீது ஏன் இத்தனை துவேஷம்?” என்று கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸ் தலைவர் பவன் கேரா, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாட்டி ‘அறிவிக்கப்படாத எமர்ஜென்சி’ நிலவுகிறது. கடந்த 6 ஆண்டுகளாக மோடி ஜனநாயக மரபை பலவீனப்படுத்தி வருகிறார், ஜனநாயக நிறுவனங்களை அழித்து வருகிறார். இது ஜனநாயகத்து மிக ஆபத்தானது’ என்று சாடினார்.
முன்னதாக, அமித் ஷா கூறிய போது, “இந்த நாளில், 45 ஆண்டுகளுக்கு முன், ஒரு குடும்பத்தின் அதிகாரப் பேராசையால் நாட்டில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டது. ஒரு நாள் இரவில் இந்த தேசம் சிறைச்சாலையாக மாறியது. பத்திரிகை, நீதிமன்றம், பேச்சு சுதந்திரம், அனைத்தும் காலில் போட்டு மிதிக்கப்பட்டன. ஏழைகள், வளிம்புநிலைச் சமூகத்தில் இருப்பவர்கள் மீது அட்டூழியர்கள், அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
லட்சக்கணக்கான மக்களின் கடினமான முயற்சிகளின் காரணமாக, தேசத்தில் அவசர நிலை நீக்கப்பட்டு, ஜனநாயகம் மீண்டும் வந்தது. ஆனால், இன்னும் காங்கிஸில் இன்னமும் ஜனநாயகம் இல்லாமல்தான் இருக்கிறது.
ஒரு குடும்பத்தின் நலன்தான் கட்சியின் நலனாகவும், தேசத்தின் நலனாகவும் இருந்தது. இந்த வருந்தத்தக்க நிலை, இன்றைய காங்கிரஸில்கூட நிலவுகிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT