Published : 25 Jun 2020 10:31 AM
Last Updated : 25 Jun 2020 10:31 AM

வளர்ச்சியை மகனுடனும் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி-யை மகள்கள் என வர்ணித்து காங். தலைவர் சர்ச்சைக் கருத்து 

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி அரசியல்வாதியான ஜிது பட்வாரி என்பவர் மத்திய அரசின் திட்டங்களை விமர்சித்து மேற்கொண்ட கருத்து சர்ச்சையைக் கிளப்ப அவர் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களை ‘மகள்கள்’ என்றும் வளர்ச்சி என்பதை மகனுடனும் அவர் ஒப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.

அதாவது பெண் குழந்தைகளுக்கு எதிரான கருத்தாக இது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

அவர் பதிவிட்ட கருத்து, “மக்கள் மகனை எதிர்பார்க்க பதிலாக மகள்கள் கிடைத்துள்ளனர். இந்த மகள்கள் பிறந்தனர், ஆனால் வளர்ச்சி எனும் மகன் தான் இன்னும் பிறக்கவில்லை” என்று அவர் கூறியிருந்தார்.

ஜிது பட்வாரி முன்னாள் கல்வி அமைச்சரும் மத்திய பிரதேச காங்கிரஸின் செயல்தலைவரும் ஆவார். இவர் எம்.எல்.ஏ. ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மத்திய அரசின் சப்கா சாத் சப்கா விகாஸ் என்ற கோஷத்தைக் கிண்டலடிக்கிறேன் பேர்வழி என்று பெண் குழந்தைகளை எதிர்மறையாகச் சித்தரித்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ஆனால் உடனே அவர், “புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர், “நாட்டின் பொருளாதாரத்தின் முதுகை பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி மூலம் முறித்து விட்டார் மோடிஜி, பணவீக்கம், பொருளாதாரச் சரிவு ஆகியவற்றை மக்கள் வளர்ச்சியை எதிர்நோக்கித் தாங்கிக் கொண்டார்கள். என் கருத்து புண்படுத்தியிருந்தால் மன்னிபுக் கோருகிறேன்” என்றார்.

இவரது கருத்துக்கு மாநில பாஜக கடும் விமர்சனங்களை முன்வைத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x