Published : 24 Jun 2020 10:47 AM
Last Updated : 24 Jun 2020 10:47 AM
கரோனா பாசிட்டிவ் என்று உறுதி செய்யபட்ட மேற்கு வங்கத்தின் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் தமோனாஷ் கோஷ் சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் புதன்கிழமையன்று மரணமடைந்தார். இவருக்கு வயது 60.
தெற்கு பரக்னா மாவட்டத்தின் ஃபால்டா தொகுதிக்கு 3 முறை எம்.எல்.ஏ.வாகத் தேர்வு செய்யப்பட்டவர் கோஷ். இவருக்கு கரோனா பாசிட்டிவ் என்பதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் இவருக்கு கோ-மார்பிடிட்டிஸ் என்று அழைக்கப்படும் இருதயம் மற்றும் கிட்னி நோயகள் இருந்ததால் கரோனா பாதிப்பு இவர் உயிரைப் பறித்துள்ளது.
இவரது மரணம் குறித்து மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறும்போது, “மிக மிக வருத்தமான செய்தி, தமோனாஷ் கோஷ் இன்று நம்மை விட்டு பிரிந்து விட்ட்டார். நம்முடன் 35 ஆண்டுகளாக இருந்தவர்.. கட்சிக்காகவும் மக்களுக்காகவும் தன்னை அர்ப்பணித்தவர். சமூகப்பணிகள் மூலம் பல நல்லவற்றைச் செய்துள்ளார்.
இவர் விட்டுச் சென்ற காலியிடத்தை நிரப்புவது கடினம். அனைவரின் சார்பாகவும் இதயப்பூர்வமான இரங்கல்களை அவரது மனைவி ஜார்னா, மகள் மற்றும் நண்பர்க்ளுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT