Published : 24 Jun 2020 10:53 AM
Last Updated : 24 Jun 2020 10:53 AM
ஒரு குடும்பமும் அதன் வாரிசுகளும் எதிர்க்கட்சியாக தங்களைப் பற்றி பெரும் மாயையை மனதில் கொண்டிருக்கிறார்கள், ஆனால் உண்மையில் மக்களால் அவர்கள் நிராகரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டபட்டவர்கள் அந்த ஒரு குடும்பம் முழுமையான எதிர்க்கட்சிக்கு சமமாகிவிட முடியாது என்றும் எதிர்ப்பிற்கும் சமமானதல்ல என்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் குடும்பத்தை பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா கடுமையாக விமர்சித்துள்ளார்
சோனியா காந்தியின் குடும்பத்தையும், ராகுல் காந்தியையும் பெயரைக் குறிப்பிடாமல் ஒரு குடும்பம் என்ற வார்த்தையில் கடுமையாக விமர்சித்து புரிந்துகொள்ளுங்கள் என்று நட்டா தெரிவித்துள்ளார்
கிழக்கு லடாக் எல்லையில் இந்தியா, சீன ராணு வீரர்களுக்கு இடையில் நடந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த விவகாரத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கருத்து தெரிவித்தபின், காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கும், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கும் இடையே தொடர்ந்து வார்த்தை மோதல் நடந்து வருகிறது. இரு கட்சியின் தலைவர்களும் ஒருவர் மாற்றி ஒருவர் தங்கள் கருத்துக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
மன்மோகன் சிங் கருத்துக்கு ஆதரவாக ராகுல் காந்தி, ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, ப.சிதம்பரம் ஆகியோர் கருத்து தெரிவித்த நிலையில், அதற்கு ஜே.பி.நட்டாவும் பதிலடி கொடுத்து வருகிறார்.
இந்த சூழலில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா ட்விட்டரில் இன்று சோனியா காந்தி குடும்பத்தின் பெயரைக் குறிப்பிடாமல் கடுமையாக விமர்சித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
ஒரு ராஜ பரம்பரையும் அவர்களுடைய விசுவாசிகளும் எதிர்க்கட்சி என்றாலே அந்த ஒரு குடும்பம்தான் என்று மனதில் பெரும் மாயையை வைத்துக் கொண்டுள்ளார்கள். அந்த ஒரு குடும்பம் பல்வேறு தந்திரங்களை மக்களிடம் வீசுகிறது, அவர்களின் விசுவாசிகளும் போலி கதைக்கு இடமளிக்கிறார்கள். சமீபத்தில் அந்த எதிர்க்கட்சி அரசாங்கத்திடம் கேள்விகளையும் கேட்டது.
எதிர்க்கட்சியின் கேள்வி கேட்பது உரிமை. சமீபத்தில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் ஆரோக்கியமான விவாதங்களும் நடந்தன. பல எதிர்க்கட்சித் தலைவர்களும் தங்களது மதிப்புமிக்க ஆலோசனைகளை வழங்கினர். தேசத்தை முன்னோக்கி அழைத்துச் செல்லும் பாதையை தீர்மானிப்பதில் அவர்கள் மத்திய அரசை முழுமையாக ஆதரித்தனர்.
ஒரு குடும்பம் மட்டுமே விதிவிலக்காக இருந்தது. யார் என யூகித்துக்கொள்ளுங்கள்
மக்களால் நிராகரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டபட்ட அந்த ஒரு குடும்பம் முழுமையான எதிர்க்கட்சிக்கு சமமாகிவிட முடியாது. ஒரு வாரிசுக் குடும்பத்தின் நலன்கள் அனைத்தும் தேசத்தின் நலன்கள் ஆகிவிட முடியாது. நம்முடைய ராணுவத்துக்கு தேசமே ஒருங்கிணைந்து ஆதரவு தெரிவிக்கிறது. ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டும் இதுதான் நேரம். குடும்பத்தின் 9-வது வாரிசு இன்னும் காத்திருக்க வேண்டும். (ராகுல் காந்தி)
ஒரு குடும்பத்தின் தவறான செயல்களால் நம்முடைய தேசத்தின் நிலப் பகுதியில் ஆயிரக்கணக்கான சதுர கிலோமீட்டர்களை இழந்துவிட்டோம். சியாச்சின் பனி மலை கிட்டத்தட்ட போய்விட்டது. இன்னும் ஏராளம். அவற்றை இந்ததேசம் நிராகரித்ததில் ஆச்சரியமில்லை.
இவ்வாறு ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT