Published : 23 Jun 2020 12:10 PM
Last Updated : 23 Jun 2020 12:10 PM
ஜூன் 10ம் தேதி பிடிக்கப்பட்ட புலி ஒன்று நாக்பூர் மீட்பு மையத்தில் பரிதாபமாக உயிரிழந்தது. முன்னதாக இந்தப் புலி தாக்கியதில் 5 பேர் உயிரிழந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, “கே.டி.1 என்று அழைக்கப்படும் இந்தப் புலி ஜூன் 11, 2020 அன்று கோரேவாதா மீட்பு மையத்துக்கு கொண்டு வரப்பட்டது. அதன் பிறகு புலி தனிமைப்படுத்தப்பட்டது. ஆனால் இங்கு கொண்டு வந்த பிரகு புலிக்கு பசியே எடுக்கவில்லை, அதனால் சாப்பிடவேயில்லை. தனிமை வாழ்க்கைக்குப் பழகாததால் அது சோர்வானதாகத் தெரிகிறது.
வனக்காவலர்கள் ஜூன் 22ம் தேதியன்று புலி சோர்வாக இருப்பதைக் கண்டு தெரிவித்தனர். ஆனால் இன்று காலை 7மணிக்கு அது மரணமடைந்தது” என்று தெரிவித்தனர்.
பிரேதப் பரிசோதனையில் புலி ரத்த ஒட்ட தொற்று மற்றும் அதனால் ஏற்படும் அழற்சியினால் (செப்டிசீமியா) இறந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. அதாவது, ரத்தம் நச்சுத்தன்மையடைந்ததால் புலி இறந்துள்ளது.
இது முதற்கட்ட ஆய்வில் உறுதி செய்யப்பட்ட தகவலே. ஆனால் இறுதி பிரேதப் பரிசோதனை அறிக்கை இன்னும் வெளியாகவில்லை.
பரிதாபமாக இறந்த இந்தப் புலியின் உடல் தகனம் செய்யப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT