Published : 23 Jun 2020 06:49 AM
Last Updated : 23 Jun 2020 06:49 AM
சீன எல்லையில் அந்நாட்டு ராணுவம் படைகளை குவித்து வருவ தால் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. அதே நேரத்தில் இரு தரப்பிலும் ராணுவ உயரதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
கடந்த மே மாத தொடக்கத்தில் கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு, டெம்சாக், கோக்ரா, டவ்லத் பெக் ஒல்டி, பான்கோங் ஏரி பகுதிகளில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைந்தனர். இதையடுத்து இரு நாடுகளின் வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர், ராணுவ உய ரதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த் தையில் சுமுக உடன்பாடு எட்டப் பட்டு, சீன படைகள் வாபஸ் பெறப்பட்டு வந்தன.
கல்வான் பள்ளத்தாக்கு பி14 பகுதியில் இருந்து சீன வீரர்கள் பின்வாங்கினர். ஆனால், அடுத்த சில நாட்களில் அதே பகுதியில் சீன படைகள் மீண்டும் முகாமிட்டன. கடந்த 15-ம் தேதி மாலை அப் பகுதிக்கு சென்ற இந்திய ராணுவ கர்னல் சந்தோஷ் பாபு, சீன வீரர் களை அங்கிருந்து வெளியேறு மாறு அறிவுறுத்தினார். அதற்கு மறுப்பு தெரிவித்த சீன வீரர்கள், இந்திய வீரர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தினர்.
அப்போது சீன தரப்பில் 350 வீரர்களும் இந்திய தரப்பில் 100 வீரர்களும் இருந்ததாக கூறப்படுகிறது. எனினும் இந்திய வீரர்கள், தீரமாக போரிட்டு சீன வீரர்களை விரட்டியடித்தனர். இந்திய தரப்பில் கர்னல் சந்தோஷ் பாபு, தமிழகத்தை சேர்ந்த வீரர் பழனி உட்பட 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 40 முதல் 50 வீரர்கள் வரை உயிரிழந்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியப் படைகளும் குவிப்பு
‘நாட்டின் ஓர் அங்குல நிலத்தைகூட யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம். இந்தியாவை யாராவது சீண்டினால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும்’ என்று பிரதமர் நரேந்திர மோடி பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையே, எல்லையை ஒட்டியுள்ள ஜின்ஜியாங், திபெத் ஆகிய பகுதிகளில் சீனா தொடர்ந்து படைகளை குவித்து வருகிறது. ஏதாவது தாக்குதல் நடந்தால் சமாளிக்கும் வகையில் இந்தியா தரப்பிலும் படைகள் குவிக்கப்படுகின்றன. இருதரப்பிலும் விமானப் படை விமானங்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. கல்வான் நுல்லா பகுதியிலும் சீனப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. எல்லையில் சீன படைகள் அத்துமீறினால் தகுந்த பதிலடி கொடுக்க இந்திய படைகளுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. கல்வான் பகுதியில் அத்துமீறி நுழைந்தால் தாக்குதல் நடத்தும்படி நமது ராணுவ கமாண்டர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட் டுள்ளதாக பெயர் வெளியிட விரும்பாத ராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தொடர்ந்து எல்லையில் படைகள் குவிக்கப் பட்டு வருவதால் லடாக் பகுதியில் பதற்றம் நீடிக்கிறது.
பேச்சுவார்த்தை
இந்தப் பின்னணியில், லடாக் எல்லையில் சீன பகுதிக்கு உட்பட்ட மால்டோவில் இந்திய, சீன ராணுவ உயரதிகாரிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். லெப்டினென்ட் ஜெனரல் நிலை யிலான ராணுவ அதிகாரிகள் தலைமையிலான குழு பேச்சு வார்த்தையை நடத்தியது. அப் போது, கடந்த 15-ம் தேதி நடந்த மோதலில் சீன ராணுவத்தின் கமாண்டர் நிலை யிலான அதிகாரி உயிரிழந்ததை சீன தரப்பு உறுதி செய்தது.
கல்வான் பள்ளத்தாக்கு மட்டு மன்றி கிழக்கு லடாக்கின் இதர எல்லைப் பகுதிகளிலும் பதற் றத்தை தணிப்பது குறித்து இரு தரப்பினரும் நீண்ட பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த 6-ம் தேதி நடந்த ராணுவ உயரதிகாரிகளின் பேச்சுவார்த்தை யில் எடுக்கப்பட்ட முடிவுகளை சீன தரப்பு நேர்மையுடன் அமல் படுத்தவில்லை என்பதால் எல்லை யில் எப்போதும் உஷார் நிலையில் இருக்க இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT