Last Updated : 22 Jun, 2020 12:54 PM

 

Published : 22 Jun 2020 12:54 PM
Last Updated : 22 Jun 2020 12:54 PM

2 ஆயிரத்துக்கும் அதிகமான முறை அத்துமீறல்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் சிறிய ராக்கெட் குண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடு: ராணுவ வீரர் உயிரிழப்பு

கோப்புப்படம்

ஜம்மு

ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியிலும், சர்வதேச எல்லையிலும் பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது துப்பாக்கியால் சுட்டும், சிறிய ராக்கெட் குண்டுகளை வீசியும் அத்துமீறலில் ஈடுபட்டது. இதில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிருஷ்மா காதி பகுதி, கதுவா மாவட்டத்தில் உள்ள ரஜோரியின் நவ்ஷோரி பகுதியில் இன்று காலை முதல் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல்லைப் பகுதியில் சிறிய ரக குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் அத்தமீறிலில் ஈடுபட்டது.

நவ்ஷேரா எல்லைப் பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர் ஒருவர் பாகிஸ்தான் ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்தார். அவரைச் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்போது வழியிலேயே உயிரிழந்தார் என்று ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இவர், பாகிஸ்தான் ராணுவம் எல்லை மீறி துப்பாக்கியால் சுடும் தாக்குதலுக்கு இந்த மாதத்தில் பலியாகும் 4-வது ராணுவ வீரர் ஆவார். கடந்த 4 மற்றும் 10-ம் தேதிகளில் இரு ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானார்கள். அதன்பின் 14-ம் தேதி பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லையைத் தாண்டி, போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் சிறிய ரக குண்டுகளை வீசுவது இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. கடந்த 10-ம் தேதி வரை இதுவரை 2 ஆயிரத்து 27 முறை விதிமீறலில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்து பாதுகாப்புப் படையின் செய்தித்தொடர்பாளர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுயைில், “இன்று அதிகாலை 3.30 மணி அளவிலிருந்து பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாகாதி எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்திய ராணுவத்தினர் மீது துப்பாக்கியால் சுடுவதும், சிறிய ரக ராக்கெட் குண்டுகளை வீசுவதும் என அத்துமீறலில் ஈடுபட்டது. அதேபோல, நவ்ஷேரா எல்லையிலும் அதிகாலை 5.30 மணிக்கும் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்தியத் தரப்பிலும் தகுந்த பதிலடி தரப்பட்டது.

இது தவிர கதுவா மாவட்டத்தில் உள்ள ஹிராநகர், கரோல் மத்ராய் பகுதியில் உள்ள எல்லைப் பகுதியில் இன்று காலை முதல் இந்திய ராணுவத்துக்கும், பாகிஸ்தான் ராணுவத்துக்கும் தீவிரமான துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. அதிகாலை ஒரு மணியில் இருந்து நடக்கும் இந்தச் சண்டையில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x