Published : 21 Jun 2020 10:40 AM
Last Updated : 21 Jun 2020 10:40 AM
இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு அதிகரித்து 4 லட்சத்தைக் கடந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவுக்கு 15 ஆயிரத்து 413 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 306 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 10 ஆயிரத்து 461 ஆக அதிகரித்துள்ளது. இதில் குணமடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 27 ஆயிரத்து 755 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 451 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் குணமடைந்தோர் சதவீதம் 55.48 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 306 பேர் உயிரிழந்ததையடுத்து, பலியானோர் எண்ணிக்கை 13 ஆயிரத்தைக் கடந்து 13 ஆயிரத்து 254 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து 10-வது நாளாக இந்தியாவில் கரோனாவில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த 1-ம் தேதி முதல் இன்றுவரை நாட்டில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 926 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலும் மகாராஷ்டிரா, தமிழகம், குஜராத், டெல்லி, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் பங்களிப்புதான் அதிகமாகும்.
இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 5,984 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள டெல்லியில் உயிரிழப்பு 2,112 ஆகவும், குஜராத்தில் உயிரிழப்பு 1,638 ஆகவும், தமிழகத்தில் பலி எண்ணிக்கை 704 ஆகவும் அதிகரித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 540 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 501 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலி எண்ணிக்கை 507 ஆகவும், ராஜஸ்தானில் உயிரிழப்பு 337 ஆகவும் அதிகரித்துள்ளது.
தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 203 ஆகவும், ஹரியாணாவில் 149 ஆகவும், ஆந்திராவில் 101 ஆகவும் இருக்கிறது. கர்நாடகாவில் 132 பேரும், பஞ்சாப்பில் 98 பேரும் பலியாகியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 81 பேரும், பிஹாரில் 52 பேரும், ஒடிசாவில் 12 பேரும், கேரளாவில் 21 பேரும், உத்தரகாண்டில் 27 பேரும் , இமாச்சலப் பிரதேசத்தில் 8 பேரும், ஜார்க்கண்டில் 11 பேரும், அசாமில் 9 பேரும் உயிரிழந்துள்ளனர். மேகாலயாவில் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுச்சேரியில் 7 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 205 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 64,153 ஆக உயர்ந்துள்ளது.
அதைத் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்து 845 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 31,316 ஆகவும் அதிகரித்துள்ளது.
3-வது இடத்தில் உள்ள டெல்லியில் 56,746 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 31,294 பேர் குணமடைந்துள்ளனர். 4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 26,680 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 18,694 பேர் குணமடைந்தனர்.
ராஜஸ்தானில் 14,536 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 11,726 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 16,594 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் 13,531 பேரும், ஆந்திராவில் 8,452 பேரும், பஞ்சாப்பில் 3,952 பேரும், தெலங்கானாவில் 7,072 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 5,834 பேர், கர்நாடகாவில் 8,694 பேர், ஹரியாணாவில் 10,233 பேர், பிஹாரில் 7,533 பேர், கேரளாவில் 3,039 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,568 பேர் குணமடைந்துள்ளனர்.
ஒடிசாவில் 4,586 பேர், சண்டிகரில் 404 பேர், ஜார்க்கண்டில் 1,965 பேர், திரிபுராவில் 1,186 பேர், அசாமில் 4,904 பேர், உத்தரகாண்டில் 2,301 பேர், சத்தீஸ்கரில் 2,041 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 656 பேர், லடாக்கில் 836 பேர், நாகாலாந்தில் 201 பேர், மேகாலயாவில் 44 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தாதர் நகர் ஹாவேலியில் 68 பேர், புதுச்சேரியில் 286 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 118 பேர் குணமடைந்தனர். மிசோரத்தில் 140 பேர், சிக்கிமில் 70 பேர், மணிப்பூரில் 777 பேர், கோவாவில் 754 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அருணாச்சலப் பிரதேசத்தில் 135 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தமான் நிகோபர் தீவுகளில் 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT