Published : 20 Jun 2020 05:31 PM
Last Updated : 20 Jun 2020 05:31 PM

நமஸ்தே யோகா: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கலாச்சார அமைச்சகம் ஏற்பாடு

புதுடெல்லி

கலாச்சார அமைச்சகம் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நமஸ்தே யோகா நிகழ்ச்சி மூலம் கொண்டாடுகிறது.

மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரஹ்லத் சிங் படேல் தெரிவித்தார் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு (ஜூன் 21, 2020) புராண கிலாவில் உள்ள தனது வீட்டில் சூரிய நமஸ்காரம் செய்யப்போவதாகவும் அனைவரும் தன்னுடன் இணைந்து அவரவர் வீடுகளில் சூரிய நமஸ்காரம் செய்யவும் வேண்டுகோள் விடுத்தார். பிரதமர் நரேந்திர மோடி யோகாவின் மகத்துவத்தைப் புரிய வைக்கும் வண்ணம் யோகா தினத்தை பரிசாக வழங்கியுள்ளார் என்றும், நமது அன்றாட வாழ்க்கையில் யோகா பயிற்சி செய்ய வேண்டும் என்றும் பிரஹ்லாத் சிங் கூறினார்.

பிரஹ்லாத் சிங் சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டு, அனைவரும் தங்கள் சூரிய நமஸ்கார் வீடியோவை #10 மில்லியன் சூரியநாமஸ்கார் & # நமஸ்தே யோகா என்ற Hash tag பயன்படுத்தி சமூக ஊடக தளங்களில் வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார்.

இதனால் இது ஒரு பொது இயக்கமாக மாறக்கூடும் என்றும். சகமக்களிடையே சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார். கலாச்சார அமைச்சரின் இந்தச் செய்தி சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 2020 சர்வதேச யோகா தினத்தில் சுமார் 10 மில்லியன் மக்கள் சூரிய நமஸ்காரம் செய்ய அவருடன் இணையக்கூடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

எல்லோருடைய வாழ்க்கையிலும் யோகாவை இன்றியமையாத பகுதியாக மாற்றும் இலக்கை அடைய 2020ஆம் ஆண்டு ஜூன் 19 முதல் 21 ஆம் தேதி வரை நமஸ்தே யோகா என்ற பிரச்சாரத்தை ஏற்பாடு செய்வதன் மூலம் கலாச்சார அமைச்சகம் 2020 சர்வதேச யோகா தினத்தை கொண்டாடுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x