Published : 20 Jun 2020 04:55 PM
Last Updated : 20 Jun 2020 04:55 PM
லிட்டருக்கு ரூ.61 காசுகள் விலை உயர்வுக்குப் பிறகு டீசல் விலை சாதனை உயர்வை எட்டியது, டெல்லியில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.67 காசுகள் ஆக உள்ளது.
டெல்லியில் பெட்ரோல் அதிகபட்ச விலையை எட்டியது அக்டோபர் 4ம் தேதி 2018-ம் ஆண்டில் ஆகும் அப்போது லிட்டருக்கு பெட்ரொல் விலை ரூ.84 ஆக விண்ணை முட்டியது.
டீசல் விலை இதற்கு முன்பு டெல்லியில் கடந்த அக்டோபர் 2018-ல் லிட்டருக்கு ரூ.75.69 என்ற அதிகபட்ச விலையை எட்டியது, இப்போது அதையும் கடந்து விட்டது.
சனிக்கிழமையன்று பெட்ரோல் விலையும் தொடர்ச்சியாக 14வது நாள் உயர்த்தப்பட்டதில் டெல்லியில் பெட்ரோல் விலை 51 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.78.88 ஆக உள்ளது.
வரிசையாக பெட்ரோல் டீசல் விலைகள் 14 நாட்களுக்கு உயர்த்தப்பட்டதில், பெட்ரொல் விலை ரூ.7.62-ம் டீசல் விலை ரூ.8.28ம் அதிகரித்துள்ளது, பொதுவாக பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தால் மற்ற அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்வது வழக்கம்.
உலக சந்தையில் கச்சா விலை கடுமையாகக் குறைந்த போதிலும் அதன் பயனை மக்களுக்கு அளிக்காமல் அரசு மக்களை சுரண்டுகிறது என்று காங்கிரஸ் கட்சியின் கபில் சிபல், ப.சிதம்பரம் உள்ளிட்டோர் பாஜக அரசை விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 143 டாலர்கள் வரை சென்று பிறகு 120 டாலருக்கு நிலையானது. அப்போது கூட பெட்ரோல் விலை ரூ.73 ஆக இருந்தது. அதற்கு பாஜக எதிர்ப்புப் போராட்டத்தில் இறங்கியது. இன்று கச்சா எண்ணெய் விலை குறைந்த போது பெட்ரோல் விலை லிட்டருக்கு கிட்டத்தட்ட ரூ.79 ஆக உள்ளது என்று எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT