Last Updated : 20 Jun, 2020 11:31 AM

 

Published : 20 Jun 2020 11:31 AM
Last Updated : 20 Jun 2020 11:31 AM

இந்தியாவில் 4 லட்சத்தை நெருங்கும் கரோனா பாதிப்புகள்; ஒரேநாளில் 14,516 பேருக்கு தொற்று: சுகாதார அமைச்சகம் தகவல்

இந்தியாவில் ஒரே நாளில் 14,516 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.9 லட்சமாக அதிகரித்து 4 லட்சத்தை நெருங்கி வருகிறது. உயிரிழப்பு 12,948 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஜூன் 1ம் தேதி முதல் 20ம் தேதிவரை இந்தியாவில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரசால் புதிதாக 14,516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 95 ஆயிரத்து 048 ஆக அதிகரித்துள்ளது.

அதில், ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 269 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 லட்சத்து 13 ஆயிரத்து 831 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.

மொத்தம் 54.12 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 375 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 948 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மகாராஷ்ட்ராவில் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 24 ஆயிரத்து 331 ஆக அதிகரிக்க பலியானோர் எண்ணிக்கை 5,893 ஆக அதிகரித்துள்ளது.

இரண்டாவது இடத்தில் தமிழகம் பாதிப்பு எண்ணிக்கை 54,4449 ஆக அதிகரிக்க, பலி எண்ணிக்கை 666 ஆக உள்ளது.

மாநில வாரியாக பாதிப்பு விவரம்:

மஹாராஷ்டிரா பாதிப்பு எண்ணிக்கை 1,24,331; பலி எண்ணிக்கை 5,893

தமிழகம் பாதிப்பு 54,449 - பலி 666

மற்ற மாநிலங்கள் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை விவரம்

டில்லி -53,116; 2,035

குஜராத்-26,141; 1,618

உ.பி.,-15,785; 488

ராஜஸ்தான்-14,156; 333

மேற்கு வங்கம்- 13,090; 529

ம.பி.,-11,582; 495

ஹரியானா-9,743; 144

கர்நாடகா-8,281; 124

ஆந்திரா 7,961; 96

பீஹார்-7,181 ; 50

தெலுங்கானா-6,526; 198

காஷ்மீர்-5,680; 75

அசாம்-4,904; 09

ஒடிசா-4,677; 11

பஞ்சாப் 3,832; 92

கேரளா-2,912; 21

உத்தர்காண்ட்-2,177; 26

சத்தீஸ்கர்-2,028; 10

ஜார்க்கண்ட்-1965; 11

திரிபுரா-1,178; 01

லடாக்- 744; 01

கோவா-725; 0

மணிப்பூர்-681; 0

ஹிமாச்சல பிரதேசம்-619; 08

சண்டிகர்-381; 06

நாகலாந்து-198; 0

மிசோரம்-130; 0

அருணாச்சல பிரதேசம்-103; 0

புதுச்சேரி-286; 07

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x