Published : 19 Jun 2020 08:56 PM
Last Updated : 19 Jun 2020 08:56 PM

கேரளாவில் இன்று ஒரே நாளில் 118 பேருக்குக் கரோனா; புதிதாக 7 இடங்கள் ஹாட் ஸ்பாட் பட்டியலில் சேர்ப்பு: அமைச்சர் ஷைலஜா தகவல்

கேரளாவில் இன்று ஒரே நாளில் அதிக அளவாக 118 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகக் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
’’மலப்புரம் மாவட்டத்தில் 18 பேர், கொல்லம் மாவட்டத்தில் 17 பேர், ஆலப்புழா மாவட்டத்தில் 13 பேர், எர்ணாகுளம் மாவட்டத்தில் 11 பேர், பாலக்காடு மாவட்டத்தில் 10 பேர், பத்தினம்திட்டா மாவட்டத்தில் 9 பேர், திருவனந்தபுரம் மற்றும் கண்ணூர் மாவட்டங்களில் தலா 8 பேர், கோட்டயம் மாவட்டத்தில் 7 பேர், கோழிக்கோடு மாவட்டத்தில் 6 பேர், வயநாடு மற்றும் காசர்கோடு மாவட்டத்தில் தலா 4 பேர், இடுக்கி மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் தலா ஒருவர் எனக் கேரளத்தில் இன்று புதிதாக, மிக அதிக அளவாக 118 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட அளவில் கண்ணூரில் 21 பேர், மலப்புரத்தில் 15 பேர், கொல்லம் மற்றும் பாலக்காட்டில் தலா 14 பேர், திருச்சூரில் 12 பேர், கோட்டயத்தில் 7 பேர், ஆலப்புழாவில் 4 பேர், திருவனந்தபுரம், கோழிக்கோடு மற்றும் காசர்கோட்டில் தலா 3 பேர் கரோனா தொற்றிலிருந்து இன்று குணமடைந்திருக்கிறார்கள். இவர்களையும் சேர்த்து இதுவரை மாநிலத்தில் 1,509 பேர் குணமாகி வீடு திரும்பியிருக்கிறார்கள். இன்னும் 1,380 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

​​மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் 1,30,655 பேர் வீட்டில் அல்லது நிறுவனத் தனிமைப்படுத்தலில் கண்காணிப்பில் உள்ளனர். 1,914 பேர் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 197 பேர் கரோனா அறிகுறிகளுடன் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கண்ணூர் மாவட்டத்தில் புதிதாக 7 இடங்கள் இன்று நோய்த் தொற்றுப் பரவல் அதிகம் உள்ள ஹாட் ஸ்பாட் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இதையும் சேர்த்து தற்போது கேரளாவில் ஹாட் ஸ்பாட் பகுதிகளின் எண்ணிக்கை 112 ஆக உள்ளது’’.

இவ்வாறு அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x