Published : 19 Jun 2020 08:27 AM
Last Updated : 19 Jun 2020 08:27 AM
சீனாவுடன் ராஜதந்திர நடவடிக்கை, நிர்வாகரீதியான பேச்செல்லாம் பயனளிக்காது. 1962-ம் ஆண்டில் இருந்ததைப் போன்று இந்தியா மென்மையாக இருப்பார்கள் என்று சீனா நினைக்கவும் கூடாது என்று பாஜக எம்.பி.யும் மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி அதிரடியாகத் தெரிவித்துள்ளார்
கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த திங்கள்கிழமை இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் ஏற்பட்ட கடுமையான மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர்வீரமரணம் அடைந்தனர். 50-க்கும் ேமற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். அதேபோல சீன தரப்பிலும் 35க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாக செய்திகள் வந்தாலும் சீனா அதிகாரப்பூர்வமாக வெளியிட மறுக்கிறது.
அதுமட்டுமல்லாமல் கல்வான் பள்ளத்தாக்கு தங்களுக்கு சொந்தமானது, இதில் தங்களுக்குத்தான் இறையாண்மை இருக்கிறது என்று சீனா உரிமை கொண்டாடுகிறது. ஆனால், இதற்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ள மத்திய அரசு, சீனாவின் பேச்சை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளது
இதனால் இரு நாட்டு எல்லையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை தீர்த்துக்கொள்ள மீண்டும் ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் வெளிநாட்டு நிருபர்கள் கிளப் சார்பில் பாஜக மூத்த தலைவரும், எம்.பியுமான சுப்பிரமணியன் சுவாமியிடம் ஆன்-லைன் மூலம் நேற்று நேர்காணல் நடத்தப்பட்டது. அப்போது சுப்பிரமணியன் சுவாமியிடம், சீனாவிடம் இழந்த நிலப்பகுதியை மீட்க இந்தியா போர் தொடுக்குமா என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு சுப்பிரமணியன் சுவாமி பதில் அளிக்கையில் “ கிழக்கு லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்குப்பகுதியில் இந்திய வீரர்கள் எல்லை தாண்டி வந்தார்கள் என்று சீனா கூறுவது பொய். உண்மையில் சீன ராணுவ வீரர்கள் தான் எல்லைக் கட்டுப்பாட்டுப்பகுதியைக் கடந்து இந்தியப் பகுதிக்குள் வந்து நம்முடைய வீரர்களைச் சீண்டியுள்ளார். நம்முடைய வீரர்கள் எல்லை மீறியதற்கும், ஆத்திரமூட்டும் செயல்களில்ஈடுபட்டார்கள் என்ற கேள்விக்கே இடமில்லை
இந்தியர்களில் பெரும்பாலானோர் நாட்டுக்காக போராட வேண்டும் என்று விரும்புவதால், சீன ஆக்கிரமித்துள்ள இந்திய நிலப்பகுதியை இந்தியா மீட்டெடுக்க வேண்டும்.
என்னுடைய கட்சியின் மனநிலை என்ன என்பது பற்றி எனக்குத் தெரியும். எந்த அடிப்படையில் ஆட்சிக்கு வந்தார்கள் என்பதும் எனக்குத் தெரியும், என்ன விலைகொடுத்தாலும் அந்தநிலத்தை மீட்க வேண்டும். இழந்த நிலப்பகுதியை மீட்காவி்ட்டால் அது தற்கொலைக்குச் சமம்.
சீனாவுடன் நாம் ராஜதந்திர நடவடிக்கையில் ஈடுபடுவதெல்லாம் பயன் அளிக்காது, பிரச்சினைத் தீர்க்காது. சீன ராணுவம் திரும்பிப் போகமாட்டார்கள். இந்திய மக்களும், பிரதமர் மோடியும் பொறுமையாக இருக்கமாட்டார்கள்.
இந்த புதிய நிலைப்பாட்டை மோடி ஏற்றுக்கொண்டிருக்கிறார். ஆதலால், நாம் போருக்குப் போகப்போகிறோம், அது குறிப்பிட்ட இலக்கை நோக்கிய போராக இருக்கலாம். கடந்த 1962-ம் ஆண்டு நம் கழுத்தைச் சுற்றி என்ன தொங்கினாலும் சரி, அதேபோன்ற சூழல் இப்போது இல்லை
கடந்த 1962-ம் ஆண்டில் இருந்ததைப் போன்று இந்தியர்கள் மென்மையாக இருப்பார்கள் என்று சீனா நினைத்துவிடக்கூடாது
இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT