Published : 18 Jun 2020 08:35 PM
Last Updated : 18 Jun 2020 08:35 PM
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் குணமடையும் விகிதம் 52.96 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 24 மணி நேரத்தில், 7390 கொவிட்-19 நோயாளிகள் குணமாகியுள்ளனர். இதுவரை, கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட மொத்தம் 1,94,324 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 52.96 சதவீதமாக அதிகரித்துள்ளது.
தற்போது 1,60,384 நோயாளிகள் மருத்துவக் கண்காணிப்பில் இருக்கிறார்கள். அரசு பரிசோதனைச் சாலைகள் 699 ஆகவும், தனியார் பரிசோதனைச் சாலைகள் 254 ஆகவும் (மொத்தம் 953) அதிகரித்துள்ளன.
நிகழ்நேர பிசிஆர் (Real Time – RT PCR) அடிப்படையிலான சோதனைச் சாலைகள் – 540 (அரசு : 349 + தனியார் : 191), ட்ரூனேட் (TrueNat) அடிப்படையிலானச் சோதனைச் சாலைகள் – 340 (அரசு : 325 + தனியார் : 15), CBNAAT அடிப்படையிலான சோதனைச் சாலைகள் – 73 (அரசு : 25 + தனியார் : 48) ஆகும்.
கடந்த 24 மணி நேரத்தில், 1,65,412 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 62,49,668 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT