Published : 18 Jun 2020 02:32 PM
Last Updated : 18 Jun 2020 02:32 PM

சீன மொபைல் போன் விளம்பரத்தை கருப்பு மை கொண்டு அழித்த பப்பு யாதவ்; மண் அள்ளும் இயந்திரம் மீது ஏறி போராட்டம்; வீடியோ

பாட்னா

பாட்னாவில் ஜன் அதிகார் கட்சித் தலைவர் பப்பு யாதவ் ஜேசிபி இயந்திரத்தில் ஏறி சீன மொபைல் போன் நிறுவனத்தின் விளம்பர போர்டை கருப்பு மை கொண்டு அழித்த சம்பவம் பரபரப்பை ஏற்பத்தியது.

சீனாவை ஒட்டியுள்ள லடாக் எல்லையில் இந்தியப் பகுதிக்குள் சாலை அமைக்கும் பணி கடந்த மே மாதத் தொடக்கத்தில் நடை பெற்றது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சீனா, அந்தப் பகுதி தங்களுக்கு சொந்தமானது என்றும், அங்கிருந்து இந்திய ராணுவப் படை வெளியேற வேண்டும் எனவும் கூறியது.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதிக்குள் சீன ராணுவப் படையினர் அத்துமீறி நுழைய முயன்றனர். இதனை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்தபோது இரு தரப்புக்கும் இடையே லேசான மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, இரு நாடுகளும் தங்கள் ராணுவ வீரர்களை அங்கு குவித்ததால் இந்திய – சீன எல்லைப் பகுதியில் பதற்றம் உருவாகியது.

இதனிடையே, இரு தரப்பைச் சேர்ந்த ராணுவ உயரதிகாரிகள் தலைமையில் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, அந்தப் பகுதியில் இருந்து ராணுவ வீரர்களை விலக்கிக் கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, கடந்த திங்கள்கிழமை மாலைசீன ராணுவப் படைகள் அங்கிருந்து வெளியேறும் போது, இந்திய ராணுவத்தினரை இரும்புக் கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் அவர்கள் திடீரென தாக்கியதாக கூறப்படுகிறது. இதற்கு இந்தியா சார்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. இந்த பயங்கர மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். சீனா தரப்பில் 43 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகின. சீனாவின் இந்த அட்டூழியத்திற்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில் பிஹார் மாநிலம் பாட்னாவில் ஜன் அதிகார் கட்சித் தலைவர் பப்பு யாதவ் சீன மொபைல் போன் நிறுவனத்தின் விளம்பர போர்டை கருப்பு மை கொண்டு அழிக்கும் போராட்டம் நடைபெறும் என அறிவித்தார். ஆனால் அதன்படி கருப்பு மை கொண் அழிக்குமம் போராட்டம் நடைபெற்றது. அப்போது மிக உயர்ந்த சீன மொபைல் போன் விளம்பர போர்டு ஒன்று இருந்தது.

அதன் மேல் ஏறுவதற்கு வசதி இல்லாததால் ஜேசிபி இயந்திரத்தில் ஏறி சீன மொபைல் போன் நிறுவனத்தின் விளம்பர போர்டை கருப்பு மை கொண்டு அழித்தார். ஜேசிபி இயந்திரத்தின் மண் அள்ளும் கலப்பை பகுதியில் அமர்ந்தவாறே அவர் போர்டில் இருந்த வாசகங்களை அழித்தார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்பத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x