Published : 18 Jun 2020 02:09 PM
Last Updated : 18 Jun 2020 02:09 PM
கரோனா பாதிப்பை வாய்ப்பாக பயன்படுத்தி நமது நாடு இறக்குமதியை குறைத்து தற்சாப்பு பொருளாதார நாடாக உருவெடுக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
வணிக ரீதியான பயன்பாட்டுக்காக 41 நிலக்கரி சுரங்க ஏலத்தை டெல்லியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். காணொலி காட்சி மூலம் பங்கேற்ற பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பேசியதாவது:
நிலக்கரி துறை வளர்ச்சிக்கு போடப்பட்ட பூட்டு இன்று உடைக்கப்பட்டுள்ளது. எரிசக்தியில் தன்னம்பிக்கை அடைய இந்தியா இன்று பெரிய நடவடிக்கை எடுத்துள்ளது. 41 நிலக்கரி சுரங்கங்களின் ஏலத்தால் 5 முதல் 7 ஆண்டுகளில் ரூ.33 ஆயிரம் கோடிக்கு முதலீடு வரும் என எதிர்பார்ப்பு உள்ளது.
வணிக ரீதியில் நிலக்கரி சுரங்க ஏலங்களின் தொடக்கமானது ஒவ்வொரு பங்குதாரருக்கும் வெற்றி என்ற நிலையை கொடுக்கும். நிலக்கரிக்கான சந்தை இப்போது திறக்கப்பட்டுள்ளது. இது அனைத்து துறைகளுக்கும் உதவும்.
சுய சார்பு இந்தியாவாக மாற இறக்குமதியாகும் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிலை வர வேண்டும். இந்தியா கரோனா நெருக்கடியை ஒரு வாய்ப்பாக மாற்றியுள்ளது. நமது நாடு எதிர்காலத்தில் இறக்குமதியைக் குறைத்து தற்சார்பு பொருளாதார நாடாக உருவெடுக்கும்.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து நாம் வளம் பெற வேண்டிய அவசியமில்லை. நமது நாட்டின் வளங்களே நம்மை வல்லரசாக்கும். இதற்காக 4 திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் சுமார் 20 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT