Published : 18 Jun 2020 11:13 AM
Last Updated : 18 Jun 2020 11:13 AM
இந்தியாவில் இதுவரையில்லாமல் கரோனா வைரஸால் கடந்த 24 மணிநேரத்தில் 12 ஆயிரத்து 881 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 334 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து 7-வது நாளாக பாதிப்பு 10 ஆயிரத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் ஒட்டுமொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 66 ஆயிரத்து 946 ஆக அதிகரித்துள்ளது. இதில் குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 324 ஆகவும், சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 384 ஆகவும் இருக்கிறது. இந்தியாவில் கரோனாவில் குணமடைந்து வருவோர் சதவீதம் 52.95 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் நேற்று 334 பேர் உயிரிழந்த நிலையில் ஒட்டுமொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்து 237 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 114 பேரும், டெல்லியில் 67 பேரும், தமிழகத்தில் 48 பேரும் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் 27 பேர், உத்தரப் பிரதேசத்தில் 18 பேர், ஹரியாணாவில் 12 பேர், மேற்கு வங்கத்தில் 11 பேர், கர்நாடகாவில் 8 பேர், பஞ்சாப், மத்தியப் பிரதேசத்தில் தலா 6 பேர், ராஜஸ்தானில் 5 பேர், பிஹாரில் 3 பேர், ஜம்மு காஷ்மீர், ஆந்திராவில் தலா 2 பேர் உயிரிழந்தனர். சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், புதுச்சேரி, தெலங்கானா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் நிகழ்ந்த உயிரிழப்புகளில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,409 பேரும், டெல்லியில் 437 பேரும், தமிழகத்தில் 49 பேரும் பலியாகியுள்ளனர்.
குஜராத்தில் 28 பேர், உத்தரப் பிரதேசம், ஹரியாணாவில் தலா 18 பேர், மேற்கு வங்கத்தில் 10 பேர், ராஜஸ்தானில் 7 பேர், மத்தியப் பிரதேசத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகாவில் 5 பேர், தெலங்கானாவில் 4 பேர், சத்தீஸ்கர், பிஹார், ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், பஞ்சாப், புதுச்சேரி, உத்தரகாண்டில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 5,651 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள டெல்லியில் உயிரிழப்பு 1,904 ஆகவும், குஜராத்தில் உயிரிழப்பு 1,560 ஆகவும், தமிழகத்தில் பலி எண்ணிக்கை 576 ஆகவும் அதிகரித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 506 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 482 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 435 ஆகவும், ராஜஸ்தானில் பலி எண்ணிக்கை 313 ஆகவும் அதிகரித்துள்ளது.
தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 192 ஆகவும், ஹரியாணாவில் 130 ஆகவும், ஆந்திராவில் 90 ஆகவும் இருக்கிறது. கர்நாடகாவில் 102 பேரும், பஞ்சாப்பில் 78 பேரும் பலியாகியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 65 பேரும், பிஹாரில் 44 பேரும், ஒடிசாவில் 11 பேரும், கேரளாவில் 20 பேரும், இமாச்சலப் பிரதேசத்தில் 8 பேரும், ஜார்க்கண்டில் 8 பேரும், உத்தரகாண்டில் 26 பேரும், அசாமில் 8 பேரும் உயிரிழந்துள்ளனர். மேகாலயாவில் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுச்சேரியில் 3 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 672 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 59,166 ஆக உயர்ந்துள்ளது. அதைத் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்து 193 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 27,624 ஆகவும் அதிகரித்துள்ளது.
3-வது இடத்தில் உள்ள டெல்லியில் 47,102 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 17,457 பேர் குணமடைந்துள்ளனர். 4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 25,093 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 17,430 பேர் குணமடைந்தனர்.
ராஜஸ்தானில் 13,543 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 11,244 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 14,598 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் 12,300 பேரும், ஆந்திராவில் 7,701 பேரும், பஞ்சாப்பில் 3,497 பேரும், தெலங்கானாவில் 5,675 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 5,406 பேர், கர்நாடகாவில் 7,734 பேர், ஹரியாணாவில் 8,832 பேர், பிஹாரில் 6,492 பேர், கேரளாவில் 2,697 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,326 பேர் குணமடைந்துள்ளனர்.
ஒடிசாவில் 4,338 பேர், சண்டிகரில் 368 பேர், ஜார்க்கண்டில் 1,895 பேர், திரிபுராவில் 1,135 பேர், அசாமில் 4,605 பேர், உத்தரகாண்டில் 2,023 பேர், சத்தீஸ்கரில் 1,864 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 569 பேர், லடாக்கில் 687 பேர், நாகாலாந்தில் 193 பேர், மேகாலயாவில் 44 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் 245 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 109 பேர் குணமடைந்தனர். மிசோரத்தில் 121 பேர், சிக்கிமில் 70 பேர், மணிப்பூரில் 552 பேர், கோவாவில் 656 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அருணாச்சலப் பிரதேசத்தில் 99 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தமான் நிகோபர் தீவுகளில் பாதிக்கப்பட்டோர் யாருமில்லை''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT