Last Updated : 17 Jun, 2020 06:52 PM

4  

Published : 17 Jun 2020 06:52 PM
Last Updated : 17 Jun 2020 06:52 PM

ராணுவத்தை இந்தியா கட்டுப்படுத்த வேண்டும்- சீன வெளியுறவு அமைச்சர்; வன்முறை இருதரப்பு உறவுகளைப் பாதிக்கும்: ஜெய்சங்கர்

பெய்ஜிங்

லடாக்கின் கல்வான் பகுதியில் சீனாவின் தாக்குதலால் இருதரப்பு உறவுகளே பாதிக்கப்படும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயிடம், தொலைபேசியில் பேசிய போது, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

லடாக்கின் கல்வான் பகுதியில் நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்ததpனர். சீன தரப்பில் 43 பேர் இறந்ததாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து இரு நட்டை சேர்ந்த அமைச்சர்கள் தொலைபேசியில் பேசி கொள்வது இது தான் முதல்முறையாகும்.

தொலைபேசியில் பேசிய, வாங் யீ '' எல்லையில் ஏற்பட்ட மோதலுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கோபமூட்டும் வகையில், எந்த நடவடிக்கை எடுக்கக்கூடாது என ராணுவத்தை இந்தியா கட்டுப்படுத்த வேண்டும். இது போன்ற மோதல் மீண்டும் நடைபெறாததை இந்தியா உறுதி செய்ய வேண்டும். தற்போதைய சூழலை இந்தியா தவறாக கணிக்கக்கூடாது. அந்த பகுதியின் இறையாண்மையை பாதுகாக்க வேண்டும் என்ற சீனாவின் உறுதியை குறைத்து மதிப்பிடக்கூடாது'' என தெரிவித்தார்.

ஜெய்சங்கர் பேசியது குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''கல்வானில் நடந்தது, சீனாவால் முன்னரே திட்டமிடப்பட்டது. இதற்கான பின்விளைவுகளுக்கு அந்நாடே பொறுப்பேற்க வேண்டும். இந்த நிகழ்வுகள், இரு நாட்டு உறவில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த நேரத்தில் சீனா தனது நடவடிக்கையை ஆய்வு செய்து ஆய்வு செய்வதுடன், சரியாக நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். ஜூன் 6 ம் தேதி, இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள் முடிவை இரு தரப்பினரும் உண்மையாகவும் நேர்மையாகவும் செயல்படுத்த வேண்டும்.

இரு தரப்பு ஒப்பந்தங்களை இரு நாட்டு ராணுவங்களும் கடைபிடிக்க வேண்டும். எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியை முறையாக மதிக்க வேண்டும். தன்னிச்சையாக எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. கடந்த 6ம் தேதி எடுக்கப்பட்ட முடிவை புரிந்து கொண்டு, சூழ்நிலையை பொறுப்பான முறையில் கையாள வேண்டும். இரு தரப்பு ஒப்பந்தப்படி அமைதியை சீர்குலைக்கவும், பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் இரு நாடுகளும் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது.

ஏற்கெனவே உயர்மட்ட அளவில் மேற்கொண்ட உடன்படிக்கையை சீனா கடைப்பிடித்திருந்தால் இருதரப்பினருக்கும் ஏற்பட்ட உயிரிழப்பைத் தவிர்த்திருக்கலாம்” என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x