Published : 17 Jun 2020 10:50 AM
Last Updated : 17 Jun 2020 10:50 AM
இந்தியாவில் இதுவரையில்லாத வகையில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் 2 ஆயிரத்து 3 பேர் உயிரிழந்துள்ளனர், 10 ஆயிரத்து 974 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவிக்கிறது
கரோனா வைரஸால் இதுவரை நாட்டில் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 54 ஆயிரத்து 65 ஆக அதிகரி்த்துள்ளது. இதில் ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 935 பேர் குணமடைந்துள்ளனர், ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 237 பேர் சிகிச்சையில் உள்ளனர்
கரோனாவுக்கு கடந்த 24மணிநேரத்தில் 2,003 பலியாகியதையடுத்து, ஒட்டுமொத்த உயிரிழப்பு 11,903 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவிலிருந்து மீள்வோர் சதவீதம் 52.79 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் நிகழ்ந்த உயிரிழப்புகளில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,409 பேரும், டெல்லியில் 437 பேரும், தமிழகத்தில் 49 பேரும் பலியாகியுள்ளனர்.
குஜராத்தில் 28 பேர், உத்தரப்பிரதேசம், ஹரியாணாவில் தலா 18 பேர், மேற்கு வங்கத்தில் 10 பேர், ராஜஸ்தானில் 7 பேர், மத்தியப்பிரதேசத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகாவில் 5 பேர், தெலங்கானாவில் 4 பேர், சத்தீஸ்கர், பிஹார், ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட், பஞ்சாப், புதுச்சேரி, உத்தரகாண்டில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்
இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 5,537 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள டெல்லியில் உயிரிழப்பு 1,837 ஆகவும், குஜராத்தில் உயிரிழப்பு 1,533 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 476 ஆகவும் அதிகரித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 495 ஆக அதிகரித்துள்ளது. ராஜஸ்தானில் பலி எண்ணிக்கை 308 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பலி எண்ணிக்கை 528ஆக அதிகரித்துள்ளது.
தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 191 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 417 ஆகவும், ஆந்திராவில் 88 ஆகவும் இருக்கிறது. கர்நாடகாவில் 94 பேரும், பஞ்சாப்பில் 72 பேரும் பலியாகியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 63 பேரும், ஹரியாணாவில் 118 பேரும், பிஹாரில் 41 பேரும், ஒடிசாவில் 11 பேரும், கேரளாவில் 20 பேரும், இமாச்சலப் பிரதேசத்தில் 8 பேரும், ஜார்க்கண்டில் 8 பேரும், உத்தரகாண்டில் 25 பேரும், அசாமில் 8 பேரும் உயிரிழந்துள்ளனர். மேகாலயாவில் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுச்சேரியில் 3 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 13ஆயிரத்து 445 ஆக அதிகரித்துள்ளது.
குணமடைந்தோர் எண்ணிக்கை 57,851 ஆக உயர்ந்துள்ளது.
அதைத் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்து 019 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 26,782 ஆகவும் அதிகரித்துள்ளது.
3-வது இடத்தில் உள்ள டெல்லியில் 44,688 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16,500 பேர் குணமடைந்துள்ளனர். 4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 24,577 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 17,082 பேர் குணமடைந்தனர்.
ராஜஸ்தானில் 13,216 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 11,083 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 14,091 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் 11,909 பேரும், ஆந்திராவில் 6,841 பேரும், பஞ்சாப்பில் 3,371 பேரும், தெலங்கானாவில் 5,406 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 5,298 பேர், கர்நாடகாவில் 7,530 பேர், ஹரியாணாவில் 8,272 பேர், பிஹாரில் 6,778 பேர், கேரளாவில் 2,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,236 பேர் குணமடைந்துள்ளனர்.
ஒடிசாவில் 4,163பேர், சண்டிகரில் 358 பேர் , ஜார்க்கண்டில் 1,839 பேர், திரிபுராவில் 1,092 பேர், அசாமில் 4,319 பேர், உத்தரகாண்டில் 1,942 பேர், சத்தீஸ்கரில் 1,781 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 560 பேர், லடாக்கில் 649 பேர், நாகாலாந்தில் 179 பேர், மேகாலயாவில் 44 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் 216 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 99 பேர் குணமடைந்தனர். மிசோரத்தில் 121 பேர், சிக்கிமில் 70 பேர், மணிப்பூரில் 500 பேர், கோவாவில் 629 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அருணாச்சலப் பிரதேசத்தில் 95 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தமான் நிகோபர் தீவுகளில் பாதிக்கப்பட்டோர் யாருமில்லை''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT