Published : 17 Jun 2020 07:21 AM
Last Updated : 17 Jun 2020 07:21 AM
போபால்: கரோனா வைரஸுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மத்திய அரசின் வழிகாட்டு நெறிகளை பின்பற்றி, பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. உத்தராகண்ட், கேரளா, ஒடிசா, உ.பி., டெல்லி போன்ற மாநிலங்களில் பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்நிலையில், கரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக முகக் கவசம் வாங்குவோர், தங்களின் விருப்பமான தலைவர்களின் முகத்தை தேர்வு செய்துகொள்ள வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. போபாலில் உள்ள துணிக்கடை ஒன்றில் பிரதமர் மோடி மற்றும் பிற அரசியல் கட்சித் தலைவர்களின் முகத்துடன் கூடிய முகக் கவசங்கள் விறுவிறுப்பாக விற்பனையாகின்றன. இதுகுறித்து கடைக்காரர் கூறும்போது, “மோடி முகக் கவசம் இதுவரை 1,000 வரை விற்பனை செய்துள்ளேன். இதற்கான தேவை அதிகம் உள்ளது. ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் முகக் கசவசமும் பிரபலமாக உள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ம.பி. முன்னாள் முதல்வர் கமல்நாத் ஆகியோரின் முகக் கவசமும் எங்களிடம் உள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT