Published : 15 Jun 2020 07:01 AM
Last Updated : 15 Jun 2020 07:01 AM

மருத்துவ உபகரணங்களை எளிதில் பெற ‘ஆரோக்யபாதை’ இணையதளம் அறிமுகம்

புதுடெல்லி:

உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களை சரியான நேரத்தில் பெறுவதில் நாடு தழுவிய அளவில் பல்வேறு சிக்கல்கள் இருந்து வருகின்றன. குறிப்பாக, ஒரு சில மருத்துவ உபகரணங்கள் தேவைக்கேற்ப உற்பத்தி செய்யப்படாமல் இருத்தல், குறிப்பிட்ட உற்பத்தி நிறுவனங்களை மட்டுமே நம்பியிருத்தல், தரமான உபகரணங்களை தேர்ந்தெடுப்பதில் ஏற்படும் கால விரயம் உள்ளிட்ட பிரச்சினைகள் இதில் நிலவுகின்றன.

அதிலும், தற்போது கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் கிடைப்பதில் கூடுதல் சிரமங்கள் ஏற்படுகின்றன. இதைக் கருத்தில் கொண்டு, மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்வோர், விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்கள் ஆகியோரை ஒரே குடையின் கீழ் ஒன்றிணைக்கும் வகையில் ‘ஆரோக்யபாதை’ (www.arogyapath.in) இணையதளத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதில், எந்தெந்த உற்பத்தியாளரிடம் என்னென்ன மருத்துவ உபகரணங்கள் தற்போது இருக்கின்றன, அவற்றுக்கு எவ்வளவு தேவை உள்ளது, வாடிக்கையாளர்களுக்கு அருகில் இருக்கும் விற்பனையாளர்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இடம்பெற்றிருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x