Published : 15 Jun 2020 06:02 AM
Last Updated : 15 Jun 2020 06:02 AM
கரோனா வைரஸ் தொற்றை குணப் படுத்த ஹைட்ராக்ஸி குளோரோ குவின் மாத்திரைகளை பயன் படுத்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள் ளது. இதற்கான புதிய நெறிமுறை களை வெளியிட்டுள்ளது.
சீனாவில் இருந்து உலகின் பல நாடுகளுக்கு பரவியுள்ள கரோனா வைரஸுக்கு இதுவரை எந்த நாட்டிலும் சரியான மருந்து கண்டுபிடிக்கவில்லை. தடுப்பு மருந்தும் இதுவரை தயாராக வில்லை. உலகம் முழுவதும் 78 லட்சம் பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 லட் சத்துக்கும் அதிகமானோர் உயி ரிழந்துள்ளனர்.
இந்நிலையில், மலேரியாவுக்கு அளிக்கப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுவின், அசித்ரோ மைசின் மாத்திரைகள் கொடுத்தால் கரோனா வைரஸின் தாக்கம் குறைவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர். ஹைட்ராக்ஸி குளோரோகுவின் மாத்திரைகள் பொதுவாக, மலேரியா மற்றும் மூட்டுவலி சிகிச்சைக்கு பயன்படுகிறது. ஆனால் இந்த மாத்திரைகள், கரோனா வைரஸ் தொற்றை குறைப்பதில் அதிக பலன் அளித்தன.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கேட்டுக் கொண்டபடி இந் தியாவில் இருந்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த மாத் திரைகள் ஏற்றுமதி செய்யப் பட்டன. அமெரிக்காவில் கரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருந் ததையடுத்து ஏராளமான மாத் திரைகள் அனுப்பப்பட்டன. அதிபர் ட்ரம்ப் கூட, முன்னெச்சரிக்கையாக ஹைட்ராக்ஸி குளோரோகுவின் மாத்திரைகளை எடுத்துக்கொள் வதாக தெரிவித்தார்.
இந்நிலையில் ஹைட்ராக்ஸி குளோரோகுவின் மாத்திரைகளை பயன்படுத்துவது தொடர்பான புதிய நெறிமுறைகளை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதில், மலேரியா நோயை குணப்படுத்த பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுவின் (எச்சிகியூ) மாத்திரைகளை, கரோனா வைரஸ் தொற்றின் ஆரம்ப நிலைக்கு பயன்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில் தொற்று முற்றிய நிலையில் இருந்தால், இந்த மாத்திரையை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, கரோனா வைரஸால் தீவிரமாக பாதிக்கப்பட்டோருக்கு அசித்ரோமைசின் மருந்துடன் இணைந்து ஹைட்ராக்சி குளோரோகுவின் கொடுக்கலாம் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. ஆனால், அதை இப்போது திரும்பப் பெற்றுள்ளது. அவசரகால பயன்பாட்டுக்கு வைரஸ் தடுப்பு மருந்தான 'ரெம்டெஸிவிர்' மருந்துகளை பரிந்துரைக்கலாம் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இசிஜி பரிசோதனை கட்டாயம்
மேலும், ஹைட்ராக்ஸி குளோரோகுவின் மருந்துகளை கொடுப்பதற்கு முன்னதாக நோயாளிகளுக்கு கண்டிப்பாக இசிஜி பரிசோதனை செய்ய வேண்டும். நோயாளியின் இதயத் துடிப்பை கணக்கிட்டு அதன் பின்னரே இந்த மாத்திரைகளை தருவது குறித்து மருத்துவர்கள் பரிசீலிக்க வேண்டும். நோயாளி யின் இதயத்துடிப்பு வழக்கமான அளவைவிட அதிகமாக இருந்தால் இதை கண்டிப்பாக தரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஹைட்ராக்ஸி குளோரோகுவின் மாத்திரைகளை பொறுத்தவரை, கரோனா வைரஸுசுக்கு எதிரான ‘இன்விட்ரோ’ செயல்பாட்டை நிரூபித்துக்காட்டி உள்ளது. பல சிறிய அளவிலான ஒற்றை மைய ஆய்வுகளில் இது பயன் அளிப்பதாக காட்டப்பட்டுள்ளது.
ஆனாலும்கூட, கடுமையான வரம்புகளை கொண்ட பல பெரிய ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் பெரிய அளவுக்கு பலன் தரக்கூடிய முடிவுகள் கிடைக்க வில்லை. குறிப்பாக மரணத்தை தடுப்பதில், பயனுள்ள விளைவு களை ஏற்படுத்துவதில் சாதகமான முடிவு கிடைக்கவில்லை.
நோயாளிகளின் ஒப்புதல்
இது தொடர்பாக தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு, முடிவு களுக்காக காத்திருக்கும் நிலை யில், தொடர்புடைய நோயாளி களிடம் கலந்துபேசி முடிவு எடுத்துதான் மருந்துகளை வழங்க வேண்டும். பிற வைரஸ் தடுப்பு மருந்துகளைப் போலவே இந்த மருந்தையும் நோயின் ஆரம்ப நிலையில் பயன்படுத்த வேண்டும். அவசர கால பயன்பாட்டுக்கு ‘ரெம்டெஸிவிர்’ பரிந்துரைக்கலாம். கரோனா தீவிரம் மிதமாக இருக்கும் நிலையில், பிளாஸ்மா சிகிச்சை அளிக்கலாம் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT