Published : 13 Jun 2020 06:41 PM
Last Updated : 13 Jun 2020 06:41 PM

மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் எளிதில் வெற்றி பெறும், போதிய எண்ணிக்கை உள்ளது: சச்சின் பைலட் உறுதி

புதுடெல்லி

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தங்களின் 2 வேட்பாளர்கள் வெற்றி பெறுவதில் எந்த ஒரு சிக்கலும் இல்லை, போதுமான எண்ணிக்கை வெற்றிபெற உதவும் என்று ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.

தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், பாஜகவினர் சுயேட்சை எம்.எல்.ஏ.க்களை அணுகியிருக்கலாம் ஆனால், ‘காங்கிரஸ் முகாமில் ஒருநாளும் நெருக்கடி இல்லை’ என்றார்.

2 காங்கிரஸ் வேட்பாளர் ராஜ்யசபா எம்.பி.யாக 101 வாக்குகள் போதும், ஆனால் காங்கிரஸ் கட்சியில் மட்டுமே 107 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் அதனால் வெற்றி பெறுவதில் எந்த ஒரு சிக்கலும் இல்லை என்றார்.

கடந்த வாரம் ராஜஸ்தான் சட்டப்பேரவை தலைமைக் கொறடா மகேஷ் ஜோஷி ஊழல் தடுப்பு கழகத்திடம், தன் எம்.எல்.ஏ.க்களை பணத்தாசைக் காட்டி இழுக்கும் முயற்சி நடப்பதாக புகார் அளித்தார்.

காங்கிரஸின் விமர்சனத்தை அடுத்து ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் சதீஷ் பூனியா காங்கிரஸ் தன் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியுமா? என்று சவால் விட்டார், மேலும் முதல்வர் கெலாட்டுக்கும் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது என்றார்.

இதற்கு பதிலடி கொடுத்த சச்சின் பைலட், “என்னால் எண்ண முடிந்த அளவை விட பாஜகவின் மாநில பிரிவுகளில் கோஷ்டி மோதல் அதிகம் உள்ளது. வசுந்தரா ராஜே கோஷ்டி தனியாக உள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x