Published : 13 Jun 2020 07:09 AM
Last Updated : 13 Jun 2020 07:09 AM
ஆந்திராவின் டெக்கலி தொகுதி எம்எல்ஏ-வும் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சருமான அச்சன் நாயுடுவை மாநில லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று காலையில் கைது செய்தனர்.
இதுகுறித்து விசாகப்பட்டினத்தில் நேற்று லஞ்ச ஒழிப்புத் துறைஇணை இயக்குநர் ரவிக்குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தெலுங்கு தேசம் ஆட்சியில் இஎஸ்ஐ மருத்துவமனைகளுக்கு ரூ.988 கோடிக்கு மருந்துகள், மரச்சாமான்கள் வாங்கப்பட்டன. இதில் ரூ.150 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது. அப்போதைய காலகட்டத்தில் தொழிலாளர் நலத் துறை அமைச்சராக அச்சன் நாயுடு இருந்தார். இவர் உட்பட முன்னாள் இயக்குநர்கள் சி.கே ரமேஷ் குமார், டாக்டர் விஜயகுமார் என 40-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இதில் தொடர்புடையவர்களாக உள்ளனர். இதில் முக்கிய குற்றவாளிகளாக தற்போது முன்னாள் அமைச்சர் அச்சன் நாயுடுஉட்பட 6 பேரை கைது செய்துள்ளோம்” என்றார்.
இதற்கிடையே அச்சன் நாயுடு கைது செய்யப்பட்டதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் தெலுங்கு தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT