Published : 12 Jun 2020 06:07 PM
Last Updated : 12 Jun 2020 06:07 PM
இன்சூரன்ஸ் மற்றும் மருத்துவ பணிகள் இயக்குனரகத்தில் நடந்த 150 கோடி மோசடி தொடர்பாக தெலுங்கு தேசம் எம்எல்ஏ அச்சன் நாயுடு மாநில ஊழல் தடுப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
ஆந்திர மாநிலத்தில் இன்சூரன்ஸ் மற்றும் மருத்துவ சேவைகள் இயக்குனரகம் கடந்த ஐந்து ஆண்டுகளில் இஎஸ்ஐ மருத்துவமனைகளில் 975 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள மருந்துகள் மற்றும் பிற பொருட்களை கொள்முதல் செய்வதில் பெரும் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. இதில் அப்போது அமைச்சராக இருந்த தெலுங்கு தேச கட்சியின் மூத்த தலைவர் அச்சன் நாயுடுவுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்ட்டது. தற்போதைய எம்எல்ஏவான அச்சன் நாயுடு மீது முக்கிய பங்கு வகித்தாக குற்றம் சாட்டப்பட்டது.
திறந்த டெண்டர்களை அழைக்காமல், டெல் ஹெல்த் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு பணி ஆணைகளை வழங்குமாறு அச்சன் நாயுடு அப்போதைய ஐஎம்எஸ் இயக்குநருக்கு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை அச்சம் நாயுடு மறுத்து வந்தார். இந்தநிலையில் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் நிம்மாடா கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று அவர் கைது செய்யப்பட்டார்.
#WATCH Andhra Pradesh: Police personnel scaled the wall of TDP MLA K Atchannaidu's residence in Srikakulam to arrest him in connection with alleged irregularities in Employees' State Insurance scheme, earlier today. pic.twitter.com/fZuIlt8NhK
முன்னதாக ஆந்திர போலீஸாரை அவரது வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. இதையடுத்து அவரது வீட்டிற்குள் போலீஸார் சுவர் ஏறிக் குதித்து உள்ளே சென்றனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT