Published : 12 Jun 2020 10:20 AM
Last Updated : 12 Jun 2020 10:20 AM
இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா தொற்றால் 10 ஆயிரத்து 956 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 396 ேபர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகதாாரத்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது.
வேர்ல்டோ மீட்டர் அமைப்பின் கணக்கின்படி, உலகளவில் கரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் 5-வது இடத்திலிருந்த இந்தியா, பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி 4-வது இடத்துக்கு நகர்ந்தது.
இதன் மூலம் இந்தியாவில் கரோனாவில் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரத்து 535 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் சிகிச்சைப் பெற்று வருவோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 842 ஆகவும், குணமடைந்து சென்றோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 195 ஆகவும் உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை இல்லாத வகையில் 396 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கரோனாவால் ஒட்டுமொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 498 ஆக அதிகரித்துள்ளது
இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 3,590 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள குஜராத்தில் உயிரிழப்பு 1,385 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 431 ஆகவும் அதிகரித்துள்ளது. மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 442 ஆக அதிகரித்துள்ளது.
டெல்லியில் உயிரிழப்பு 1,085 ஆகவும், ராஜஸ்தானில் பலி எண்ணிக்கை 265 ஆகவும் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் பலி எண்ணிக்கை 349 ஆக அதிகரித்துள்ளது. தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 165 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 345 ஆகவும், ஆந்திராவில் 80 ஆகவும் இருக்கிறது.
கர்நாடகாவில் 72 பேரும், பஞ்சாப்பில் 59 பேரும் பலியாகியுள்ளனர்.ஜம்மு காஷ்மீரில் 52 பேரும், ஹரியாணாவில் 64 பேரும், பிஹாரில் 36 பேரும், ஒடிசாவில் 9 பேரும், கேரளாவில் 18 பேரும், இமாச்சலப் பிரதேசத்தில் 6 பேரும், ஜார்க்கண்டில் 8 பேரும், உத்தரகாண்டில் 15 பேரும், அசாமில் 6 பேரும் உயிரிழந்துள்ளனர். மேகாலயாவில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 97,648 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 46,078 ஆக உயர்ந்துள்ளது.
அதைத் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 716 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 20,705 ஆகவும் அதிகரித்துள்ளது.
3-வது இடத்தில் உள்ள டெல்லியில் 34,687 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12,731 பேர் குணமடைந்துள்ளனர். 4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 22,032 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 15,101 பேர் குணமடைந்தனர்
ராஜஸ்தானில் 11,838 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 10,241 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 12,088 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் 9,768 பேரும், ஆந்திராவில் 5,429 பேரும், பஞ்சாப்பில் 2,887 பேரும், தெலங்கானாவில் 4,320 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 4,574 பேர், கர்நாடகாவில் 6,245 பேர், ஹரியாணாவில் 5,968 பேர், பிஹாரில் 5,983 பேர், கேரளாவில் 2,244 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 968 பேர் குணமடைந்துள்ளனர்.
ஒடிசாவில் 3,386 பேர், சண்டிகரில் 332 பேர் , ஜார்க்கண்டில் 1,599 பேர், திரிபுராவில் 913 பேர், அசாமில் 3,319 பேர், உத்தரகாண்டில் 1,643 பேர், சத்தீஸ்கரில் 1,398 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 470பேர், லடாக்கில் 135 பேர், நாகாலாந்தில் 128 பேர், மேகாலயாவில் 44 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 67 பேர் குணமடைந்தனர். மிசோரத்தில் 102 பேர், சிக்கிமில் 14 பேர், மணிப்பூரில் 366 பேர், கோவாவில் 417 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அருணாச்சலப் பிரதேசத்தில் 61 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.அந்தமான் நிகோபர் தீவுகளில் பாதிக்கப்பட்டோர் யாருமில்லை''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT