Published : 11 Jun 2020 05:22 PM
Last Updated : 11 Jun 2020 05:22 PM
கடந்த மார்ச் முதல் டெல்லியில் கரோனா வைரஸுக்கு 2098 பேர் பலியாகியுள்ளதாக வடக்கு டெல்லி மாநகராட்சி நிலைக்குழு தலைவர் ஜெய்பிரகாஷ் அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அவர் கூறியதாவது:
மார்ச் 2020 முதல் ஜூன் 10, 2020 வரை டெல்லியின் மூன்று மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் சுமார் 2098 பேர் கரோனாவுக்கு மரணமடைந்துள்ளனர். இதற்கான இறுதிச் சடங்குகளும் நடைபெற்றன.
இவையெல்லாம் கரோனா வைரஸ் பாசிட்டிவ் நோயாளிகள் ஆவார்கள். 200 சந்தேக கரோனா தொற்றுக்கள் குறித்த தனித்த ஆவணங்களையும் நாங்கள் கொடுத்துள்ளோம், என்றார்.
ஆனால் இன்று வரை டெல்லி அரசு 984 கரோனா மரணங்கள் என்றே கூறி வருகிறது.
இன்று காலை டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறும்போது டெல்லியில் 32,810 கரோனா தொற்றுடையோர் உள்ளனர், இதில் 19581 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர் என்றார்.
இந்நிலையில் 2098 பேர் பலியாகியுள்ளதாக வடக்கு டெல்லி மாநகராட்சி நிலைக்குழு தலைவர் ஜெய்பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT