Published : 11 Jun 2020 04:30 PM
Last Updated : 11 Jun 2020 04:30 PM
கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலைக்கு முதியோர், குழந்தைகள் யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் கேரள அரசு தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் நாட்டில் பரவத் தொடங்கியதும் கடந்த மார்ச் 20-ம் தேதி முதல் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது ஆனால் வழக்கமான பூஜைகள் தேவஸ்தானம் சார்பில் செய்யப்பட்டு வந்தன.
இந்நிலையில் கரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட 4 கட்ட லாக்டவுன் முடிந்து தற்போது லாக்டவுனை நீக்கும் முதல்கட்டம் நடந்து வருகிறது. கடந்த 8-ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க மத்திய அரசு அனுமதித்து அதற்கன வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டது.
இதை அடிப்படையாக வைத்து வரும் கேரளாவில் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஷாப்பிங் மால்கள், ரெஸ்டாரண்ட்களும் திறக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையல் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதாதந்திர பூஜைக்காக திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதுகுறித்து கோயில் தந்திரி திருவாங்கூர் தேசவம்போர்டு ஆகியவற்றுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியதாவது:
சபரிமலை கோயில் தந்திரி திருவாங்கூர் தேசவம்போர்டு ஆகியவற்றுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதி வழங்கப்படுதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கோயிலன் வழக்கமான பூஜைகள் நடைபெறும். கோயில் திருவிழாவும் ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
சபரிமலை கோயில் மாதாந்திர பூஜை ஜூன் 14-ம் தேதி நடைபெறுகிறது. ஜூன் 19-ம் தேதி ஆராட்டு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT