Published : 10 Jun 2020 01:40 PM
Last Updated : 10 Jun 2020 01:40 PM
நாட்டில் கரோனா வைரஸ் பரவும் வேகத்தின் கணிதவியல் மாதிரிகளின் படி டெல்லியில் மட்டும் ஜூலை 31க்குள் 5.5 லட்சம் பேருக்கு கரோனா தொற்று ஏற்படும், இப்போது டெல்லி கரோனா வைரஸின் சமூகப் பரவல் நிலையில் உள்ளது என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
நேற்று டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும் இதையே கூறினார். டெல்லியில் 31,309 கரோனா பாதிப்பு எண்ணிக்கையாகும். இந்தியாவில் 2 லட்சத்து 76 ஆயிரத்து 583 ஆகும்.
ஷிவ்நாடார் பல்கலைக் கழகத்தின் ஆய்வாளரும் கணிதவியல் பேராசிரியருமான சமித் பட்டாச்சார்யா கூறும்போது, “நான் கணக்கிடும் மாதிரியின் பிரகாரம் இந்தியாவில் ஜூலை மத்தியில் அல்லது ஜூலை இறுதியில் 8-10 லட்சம் பேர் கரோனாவினால் பாதிப்படைவார்கள். எனவே டெல்லியில் 5.5 லட்சம் பேர் ஜூலை 31க்குள் கரோனாவால் பாதிக்கப்படுவார்கள் என்பது ஆச்சரியமல்ல” என்றார்.
வைராலஜி நிபுணர் உபாசனா ரே என்பவர் கூறும்போது தொற்று நோய் நிபுணர்களும், புள்ளி விவரதாரிகளும்தான் துல்லியமான எண்ணிக்கையையும் கணிப்புகளையும் வெளியிட முடியும், எனவே அரசு சொல்கிறது என்றால் அதற்கு ஏதாவது அடிப்படை இருக்க வேண்டும்.” என்றார்.
பஞ்சாபில் உள்ள லவ்லி தொழில் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞான தொழில்நுட்ப செயல் முதல்வர் லொவி ராஜ் குப்தா கூறும்போது, “ஜூலை 31க்குள் 5.5 லட்சம் அல்லது இந்தியாவில் 8 லட்சம் முதல் 10 லட்சம் பேருக்கு கரோனா பரவ வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்படும் தகவல் அவர்கள் தேர்வு செய்யும் கணித மாதிரியைப் பொறுத்தது. இது காலத்தொடர் தரவு என்பதால் வைரஸின் போக்கும், பருவநிலையும் இதில் முக்கியப் பங்கு வகிக்கும்” என்றார்.
காலத்தொடர் பகுப்பாய்வு என்பது புள்ளியியல் கணக்கீடு உத்டியாகும் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் உள்ள தொடர் தரவுகள் அல்லது இடைவெளிகள் ஆகியவை கொண்டு கணக்கிடப்படுவதாகும்.
கணிதவியல் மாதிரி ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகையிடையே வைரஸ் எப்படி பரவும் என்பதைப் புரிந்து கொள்ளும் மாதிரியாகும்.
அதாவது உண்மை நிலையை பிரதிபலிக்கும் கணித சமன்பாடுகளை உருவாக்கி அந்தச் சமன்பாடுகளுக்குள் சில அளவுகோல்களின் மதிப்பின் படி தீர்வு கண்டுபிடிக்கப்படும்
உதாரணமாக எவ்வளவு தொற்றுக்கள் ரிப்போர்ட் செய்யப்படுகின்றன என்பதன் தரவு, எவ்வளவு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர், எத்தனை பேர் கரோனாவினால் உயிரிழந்துள்ளனர் ஆகிய தரவுகளை வைத்து ஏற்கெனவே பரவியுள்ள கரோனா விவரங்களைக் கொண்டுதான் கணிதவியல் மாதிரி நோய்த்தொற்றின் போக்கைக் கணிக்கிறது.
நேற்று டெல்லி துணை முதல்வர் சிசோடியாவும், டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெய்னும் சேர்ந்து சமூகப் பரவல் ஆரம்பிக்கவில்லை என்றனர், ஆனால் ஆய்வாளர் பட்டாச்சார்யா கூறும்போது, “டெல்லியில் நீண்ட நாட்களுக்கு முன்பே சமூகப்பரவல் தொடங்கி விட்டது” என்கிறார்.
அதாவது சமூகப் பரவல் என்றால் அதற்காக டெல்லி முழுதும் சீராக தொற்று பரவ வேண்டும் என்ற அவசியமில்லை. ஏற்கெனவே 30,000 பேர்களை கரோனா பாதித்திருக்கிறது , டெல்லி மக்கள் தொகையைப் பார்க்கும் போது ஏற்கெனவே அங்கு சமூகப்பரவல் தொடங்கி விட்டது என்றே கருத வேண்டியுள்ளது, என்றார் பட்டாச்சாரியா.
“தொற்றுப் பரவல் பற்றிய என் புரிதலின்படி, உள்ளூர் பரவல் என்பதில் சிறிய அளவில் தொற்று எண்ணிக்கை அதிகரிப்படையும். அதன் பிறகு மெதுவே கூடுதலாக அதிகரிப்பு இருக்கும், இந்தப் புள்ளியில் சமூகப் பரவல் ஆரம்பித்து விட்டது என்று அர்த்தம்” என்கிறார் பட்டாச்சாரியா.
இன்னொரு ஆய்வாளர் ரே கூறும்போது, அதாவது சமூகப் பரவல் எனும்போது அதற்கு ஏற்கெனவே ரிப்போர்ட் செய்யப் பட்ட கேஸ்களின் மூலம் பரவியிருக்கலாம் என்று கூற முடியாது, சமூகப்பரவலின் தொடக்கப்புள்ளியை விளக்குவது கடினம். தொற்றின் மூலம் என்னவென்பதை தடம் காண முடியாது என்கிறார்.
நீண்ட கடுமையான லாக்டவுனைப் பார்த்தோம் ஆனால் கரோனா தொற்று அதிகரிக்கவே செய்துள்ளது, இதில் எங்கு தொடங்கியது எது ஆரம்பம் என்பதெல்லாம் தெரியவில்லையே, கோவிட் கேஸ்கள் அதிகரிப்பை சமூகப் பரவலுடன் தொடர்பு படுத்த முடியவில்லை எனில் அடுத்த கேள்வி ஏன் இத்தனை தொற்றுக்கள் அதிகரிக்க வேண்டும் என்பதே, வைரஸ் மிகவும் சக்திவாய்ந்ததா? அதுவும் நமக்குத் தெரியாது. அல்லது தொற்றை வேறு எங்கிருந்தாவது கொண்டு வருகிறோமா? அது எப்படி? ஏனெனில் லாக் டவுன் உள்ளதே, என்கிறார் ரே.
எனவே சமூகப் பரவல் தொடங்கியிருக்க வேண்டும் என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT