Published : 10 Jun 2020 12:05 PM
Last Updated : 10 Jun 2020 12:05 PM

சீனாவுடனான எல்லைப் பிரச்சினை: ராகுலைக் குறிவைத்த பாஜக எம்.பி; பிரதமரைக் குறிவைத்த ராகுல் காந்தி

லடாக்கில் உள்ள இந்திய எல்லைப்பகுதியை சீன ராணுவத்தினர் ஆக்கிரமித்திருக்கிறார்களா என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியதையடுத்து லடாக் பாஜக எம்பி, ராகுல் காந்திக்குப் பதிலடி கொடுக்க மீண்டும் ராகுல் காந்தி பிரதமரை நோக்கி வேறொரு கேள்வியை எழுப்பினார்.

ராஜ்நாத் சிங் ‘கை’ சின்னத்தை செய்த கிண்டலுக்கு பதில் அளிக்கும் வகையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் இன்று பதிவிட்ட கருத்தில் “ கை சின்னத்தைப் பற்றி பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து தெரிவித்து முடித்துவிட்டார். இனிமேல் அவரால் பதில் அளிக்க முடியுமா. லடாக்கில் இந்திய எல்லையை சீன ராணுவம் ஆக்கிரமித்திருக்கிறதா” எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் லடாக் பாஜக எம்.பி.ஜம்யாங் செரிங் நம்க்யால் என்பவர் மிகவும் கிண்டல் தொனியுடன் ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்துள்ளார், அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

காங்கிரஸ் ஆட்சியின் போது சீனா ஆக்ரமித்ததாக சிலபகுதிகளைச் சுட்டிக்காட்டியுள்ளார் லடாக் பாஜக எம்.பி.

அக்சை சின் (37,244 சதுர கிமீ) 1962-ல் காங்கிரஸ் ஆட்சியின் போது

தியாபங்க்நாக் மற்றும் சப்ஜி பள்ளத்தாக்கு- 2008

தேம்ஜோக்கில் உள்ள ஜொராவர் கோட்டையை சீன ராணுவத்தினர் சேதம் செய்தனர், இது 2008-ல். 2012-ல் இதே இடத்தில் பிஎல்ஏ
ராணுவம் அங்கு கண்காணிப்பு மையத்தையும் அமைத்தது. இதோடு 13 சிமெண்ட் வீடுகளையும் இந்தியப்பகுதியில் கட்டியது.

இந்தியா தூம்செலியை 2008-09 யுபிஏ ஆட்சியில் சீனாவிடம் இழந்தது.

இவ்வாறு காங்கிரஸ் ஆட்சியில் சீனாவின் அத்துமீறல்களைப் பட்டியலிட்டார்.

உடனே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இம்முறை பிரதமர் நரேந்திர மோடியைக் குறிவைத்து ட்விட்டரில், “லடாக்கில் சீனர்கள் நடந்து வந்து நம் பகுதியைக் கைப்பற்றினர். ஆனால் பிரதமர் அசாத்திய மவுனம் காக்கிறார். சீன்லயே இல்லை, மறைந்து விட்டார் பிரதமர்” என்று கிண்டலடித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x