Published : 04 Sep 2015 09:49 AM
Last Updated : 04 Sep 2015 09:49 AM
கோதாவரி மஹா புஷ்கரத்தை தொடர்ந்து, அடுத்த ஆண்டு ஆந்திர மாநிலத்தில் கிருஷ்ணா புஷ்கரம் நடைபெற உள்ளது. இது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யுமாறு கிருஷ்ணா மாவட்ட ஆட்சியருக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் புஷ்கர விழா, இந்த ஆண்டு ஆந்திர மாநிலம் கோதாவரியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களிலும் உள்ள கோதாவரி ஆற்றில் சுமார் 9 கோடி பேர் புனித நீராடினர்.
அடுத்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி கிருஷ்ணா நதியில் புஷ்கர விழா தொடங் குகிறது. ஆந்திர மாநிலம், கிருஷ்ணா, குண்டூர் மாவட்டத்தில் இவ்விழாவை கோலா கலமாக நடத்த ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. ஆனால், கோதாவரி புஷ்கரத்தில் நடந்த சில அசம் பாவித சம்பவங்களை கருத்தில் கொண்டு, அதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறா தவாறு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இது குறித்து விரைவில் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமெனவும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று குண்டூர் மாவட்ட ஆட்சியர் காந்திலால் தண்டேவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT