Published : 09 Jun 2020 10:09 PM
Last Updated : 09 Jun 2020 10:09 PM

கரோனா எண்ணிக்கை அதிகரிக்கும் 50 நகரங்கள்: மத்திய குழு ஆய்வு

பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி

கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் 50க்கும் மேற்பட்ட நகராட்சிகளுக்கு மத்திய குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

15 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட நகராட்சிகளில் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு தொற்றுப் பரவலும் அதிகரித்து வருகிறது. இந்த இடங்களில் கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தவும் நிர்வகிக்கவும் தேவையான தொழில்நுட்ப உதவியை மாநில அரசுகளுக்கு வழங்கும் வகையில் மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் பல்துறை சார்ந்த உயர்மட்ட மத்திய குழுக்களை அனுப்பி உள்ளது.

மத்திய குழு சென்றுள்ள மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் விவரங்கள்: மகாராஷ்டிரம் (7 மாவட்டங்கள் / நகராட்சிகள்), தெலுங்கானா (4), தமிழ்நாடு (7), ராஜஸ்தான் (5), அசாம் (6), ஹரியாணா (4), குஜராத் (3), கர்நாடகம் (4), உத்தரகண்ட் (3), மத்தியப் பிரதேசம் (5), மேற்கு வங்கம் (3), தில்லி (3), பீகார் (4), உத்திரப்பிரதேசம் (4) மற்றும் ஒடிசா (5).

பொது சுகாதார நிபுணர்கள் / நோயியல் நிபுணர்கள் / மருத்துவமனைசார் சிகிச்சை நிபுணர்கள் இருவர் இணைச்செயலாளர் நிலையில் மூத்த அதிகாரி ஒருவர் என ஒவ்வொரு மத்திய குழுவிலும் 3 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் இணைச் செயலாளர் நிலையிலான அதிகாரி நிர்வாக ஒருங்கிணைப்பு மற்றும் அரசாள்கை மேம்பாட்டுக்கான ஒருங்கிணைப்பு அதிகாரியாக இருப்பார்.

இந்தக் குழுவினர் களத்தில் பணிபுரிவதோடு சுகாதாரப்பராமரிப்பு வசதிகளையும் பார்வையிடுவார்கள். மாவட்டங்கள் / நகரங்களுக்குள் கட்டுப்பாட்டு மண்டலங்களை திறம்பட நடைமுறைப்படுத்துதல் மற்றும் நோயாளிகளுக்கு திறம்பட சிகிச்சை அளித்தல் / கிளினிக்கல் மேலாண்மை ஆகியவற்றில் மாநில சுகாதாரத்துறைக்கு இந்தக் குழுவினர் உதவியாக இருப்பார்கள்.

சிறந்த ஒருங்கிணைப்புப் பணி, களத்தில் விரைவாக முடிவெடுத்தல், நுண்அலகு செயல்உத்தியைக் கடைபிடித்தல், ஆகியவற்றை உறுதிசெய்யும் வகையில் மத்திய குழுக்களுடன் இந்த மாநிலங்கள் / நகராட்சிகள் தொடர்ந்து தொடர்பில்

இருக்கவேண்டும். இந்தக்குழுக்கள் ஏற்கனவே மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து செயலாற்றத் தொடங்கிவிட்டன.

பரிசோதனையில் ஏற்படும் பிரச்சினைகள், 10 லட்சம் மக்கள் தொகைக்கு செய்ய வேண்டிய பரிசோதனையை விட குறைந்த அளவிலேயே பரிசோதனைகள் செய்யப்படுதல், அதிக எண்ணிக்கையிலான உறுதிப்படுத்தல் விகிதம், அடுத்த இரண்டு மாதங்களில் செயல்திறனில் குறைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு, அதேபோன்று படுக்கை பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு, நோயாளிகளின் இறப்பு விகிதம் அதிகரித்தல், நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் விகிதம் அதிகரித்தல், சிகிச்சை பெற வேண்டிய நிலையிலான நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தல் என மாநிலங்கள் / யூனியன்பிரதேசங்களின் அதிகாரிகள் எதிர்கொண்டு வரும் சவால்களுக்குத் தீர்வுகாண இந்த மத்தியக் குழுக்கள் உதவியாக இருக்கும்.

மத்தியக் குழுவுடன் முறையாக ஒருங்கிணைந்து செயலாற்றுவதற்காக மாவட்ட அளவிலான மருத்துவ மற்றும் நிர்வாக அதிகாரிகளைக் கொண்ட பிரத்யேக சிறப்புக் குழுவினை மாவட்ட அளவில் பல்வேறு மாவட்டங்கள் / நகராட்சிகள் ஏற்கெனவே உருவாக்கி உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x